Tuesday 9 May 2023

அஷ்டாவதானிக்கு வாழ்த்துகள்

டி. ராஜேந்தர்- பிறந்த நாள் வாழ்த்துகள் தமிழ்த் திரை உலகின் அஷ்டாவதானி என்ற வார்த்தைக்கு மிகப் பொருத்தமானவர் டி. ராஜேந்தர். மே 9 ம் தேதி அவரின் 68 வது பிறந்த தினம். அவரின் முதல் படமான ஒருதலை ராகம் வெளியாகி 43 வருடங்கள் ஆகிவிட்டன. தேசிங்கு ராஜ உடையாருக்கும் ராஜலட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்த டி. ராஜேந்தர் தமிழ் சினிமா உலகில் தனித்துவமான பெயர் பெற்றவர். நிறைய புதுமைகள் நிகழ்த்தியவர். கதை திரைக்கதை வசனம் பாடல்கள் ஒளிப்பதிவு இசை இயக்கம் தயாரிப்பு கூடுதலாக நடிப்பு என்று சகலவிதங்களிலும் வென்றவர். கமல் ரஜினி போன்ற ஜாம்பவான்களுக்கே வசூலில் டஃப் கொடுத்தவர். பல திரைப்படங்கள் ஐம்பது நாட்கள் தொட தயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் அநாயாசமாய் தனது படங்களை வெள்ளிவிழா சினிமாக்களாகத் தந்தவர். குறிப்பாக பெண்கள் திரையரங்குகளுக்குப் பெரும் அலையாய் வந்தது இவரின் படங்களுக்குதான் எனலாம். அவரின் முதல் படம் என சொல்லப்படும் ஒரு தலை ராகம் படத்தில் இசையும் பாடல்களும்தான் அவரின் பங்கு என்பதே பெரும்பாலோருக்குத் தெரிந்தது. மூலக்கதை வசனம் என்று டைட்டில் போடும் இடத்தில் இடம் பெரும் ராஜேந்திரனும் இதே டி. ராஜேந்தர்தான். கதைக்களம் டி. ஆர் பிறந்த மாயவரம் என்பதும் படம் நகரும் விதம் முழுக்க டி. ஆரின் ஸ்டைல் என்பதும் இயக்கமே இவர்தானோ என்று சந்தேகிக்கத் தோன்றும். ஒரு தலை ராகம் படத்தைப் பொறுத்தவரைக்கும் இயக்கத்தில் பெரும் பஞ்சாயத்தே நடந்தது. அதை விடுத்து நாம் படம் குறித்துப் பேசுவோம். எவ்வித ஃப்ளாஷ்பேக் உத்திகளிலும் இறங்காமல் நேரடியாக முதல் காட்சியிலிருந்து கல்லூரி காதல் என்று தொடங்கிவிடும் சினிமா. மருந்துக்குக் கூட தாவணியோ மாடர்ன் உடைகளோ அணியாத முழுக்க புடவை மட்டும் அணிந்து வரும் மாணவிகள் நிறைந்த கல்லூரி. காலேஜ் கண்ணகி சுபத்ரா, காலேஜ் மைனர் ரவீந்தர், காலேஜ் ஹீரோ சங்கர் என தெளிவாய் தொடங்கும் படத்தின் வசனங்களில் ராஜேந்தரின் பங்கு நீக்கமற நிறைந்திருக்கும். ‘இந்த இதயம் இறுகிய பாறை. சிலை செய்ய நினைச்சா உளிதான் உடையும்', ‘சும்மாதான்ங்கிற வார்த்தைக்கு எவ்ளோ அர்த்தம் பாத்தீங்களா' என்பது இரு சோறு பதம். கல்லூரிக் கடைசி நாளில் சந்திரசேகர் சொல்லும் கதையிலும் டி. ஆர் டச். இப்படி ஒரு காதல் இருக்குமா இப்படி ஒரு ஊடல் இருக்குமா என எண்ணும்படி வருகிறது இடைவேளை. படத்தின் நாயகன் சங்கர். முதல் பாதியில் வார்த்தைகளுக்கு வலிக்காமல் ஒரு நடிப்பை தருபவர் இரண்டாம் பாதியில் நிகழும் ட்ரான்ஸ்பர்மேசனின் உடல் மொழியில் அட சொல்ல வைப்பார். பளிச்சென்ற கண்களுடன் க்ளீன் ஷேவ், இன்ஷர்ட், பெல்ட், மைனர் செயின் என்று பணக்கார இளைஞனாய் காட்சி தருபவர் இரண்டாம் பாதியில் அடர் தாடி, தளர் நடை, எண்ணெய் வழியும் முகம், துயர் படிந்த கண்கள் என மாறுவது ஆச்சரியம். படத்தின் காதல் தாண்டி பார்வையாளனைக் கண் கலங்க வைக்கும் காட்சி சந்திரசேகருக்கும் சங்கருக்கும் இடையிலான நட்பு. கல்லூரிக் கடைசி நாளில் சந்திரசேகர் பேசும் வசனமான காட்டுக்குப் போறப்பவும் கூட வருவான் என் நண்பன் என்பது போலவே க்ளைமாக்ஸ் அமைந்திருக்கும். காதலை விட நட்பின் அடர்த்தி பிரமாதமாய் வெளிப்பட்டிருக்கும் இப்படத்தில். நாயகி ரூபா மேல் ஆடியன்ஸுக்கே கோபம் வருவது போல் சில காட்சிகள் இருந்தாலும் அதற்கான நியாயத்தை குடும்பச் சூழல் வழி காட்டியிருப்பார். ஒரு தலையாய் காதல் என்றில்லாமல் இருவருக்குள்ளும் காதல் இருந்தாலும் நாயகியின் மெளனமே காதலின் தோல்விக்கு காரணமாய் சொல்லப்பட்டிருக்கும் கதையில் நாயகனின் மரணத்துக்கு லிவர் ஜான்டிஸ் மட்டும் காரணமில்லையே. அந்த கிளைமாக்ஸ் நிஜமான அதிர்ச்சி தரும் ஒன்று. ஒருவேளை காலம் பல கடந்தும் இத்திரைப்படம் காவியமாய் மாறியதற்கு கடைசி நேர ட்ராக் மாறுதல்தான் காரணமோ. நினைவில் நீங்காத திரைப்படம் தந்த டி. ராஜேந்தருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

Wednesday 3 May 2023

ஊமைச்சாமி

திடீரென்று கோவில் மூடப்படுவதை வாசலில் அமர்ந்தபடி உயர்த்திய புருவங்களுடன் பார்த்துக்கொண்டிருந்தான் செல்வம். உச்சி வெயில் அவன் முகத்தில் மெளனமாய் தன்னை வரைந்து கொண்டிருந்தது. கதவை மூடிவிட்டு வெளிவந்து கொஞ்சம் தள்ளி நின்று தன் இரு கைகளையும் உயர்த்தி கோபுரம் பார்த்துக் கும்பிட்டுத் திரும்பிய வரதனிடம், ‘‘என்னாச்சு சாமி திடீர்னு கோயிலை மூடிட்டீங்க?'' என்றான். பழக்க தோஷத்தில் இரு கைகளும் குவிந்து வரதனை நோக்கி ஏந்தியபடி இருந்தன. பதில் சொல்லவேண்டுமென்று அவசியமில்லைதான். ஆனால் வரதனின் மனம் செல்வத்தின் வயிற்றைக் குறித்து யோசித்தது. ‘‘ஒரு துஷ்டி நடந்துடுத்து... ரெண்டு நாள் நடை திறக்கப்படாது.'' செல்வத்துக்குப் புரியவில்லை. மேற்கொண்டு என்ன கேட்பதென்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே சட்டென்று விலகி நகர்ந்தார் பதில் சொல்லி முடித்த பெருமூச்சுடன். செல்வத்தின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த பூபதியிடம்... ‘‘என்னமோ நடந்துருக்கு. என்னன்னு தெரில...ரெண்டு நாளைக்கி பெருமாள பாக்கப் போக வேண்டிதான்.'' பூபதியின் கைகள் லேசாக நடுங்கிக்கொண்டிருந்தன. பூபதிக்கு தினம் இரவு ஒரு குவாட்டர் தேவைப்படும். யாசகமாய் விழுந்த காசுகளைக் கொண்டுபோய் கொடுத்து குவாட்டர் வாங்கிவந்து தேரடி இருளில் நின்றவாறே குடித்து பாட்டிலை சாக்கடையில் வீசிவிட்டு வருவான். டாஸ்மாக்கிலும் அவன் தரும் சில்லறைகளை எண்ணிப் பார்க்காமலே பாட்டிலை எடுத்து நீட்டிவிடுவார்கள். இன்றைய இரவுக்கான மதுவுக்குப் போதிய காசு இன்னும் சேர்ந்தபாடில்லை. அதற்குள் கோவிலை மூடிவிட்டார்கள். தன் எதிரில் அமர்ந்திருந்தவனிடம் சத்தமாகச் சொன்னான் செல்வம். ‘‘என்னா ஊமச்சாமி... ரெண்டு நாளைக்கி தொறக்க மாட்டாங்க... வர்றீங்களா பக்கத்துல பெருமா கோயிலுக்கு... அங்க உள்ளவங்ககிட்ட சொல்லிக்கலாம் ரெண்டு நாளைக்கிதான்னு...'' செல்வத்தால் ஊமைச்சாமி என்று அழைக்கப்பட்டவன், தான் வரவில்லை என்பதுபோல் தலையை இடதும் வலதுமாய் ஆட்டினான். கண்களில் தெரிந்த இறுக்கமான அமைதியில் லேசாக ஈரம் படர்ந்திருந்ததை செல்வம் கவனிக்கவில்லை. எழுந்த ஊமைச்சாமி தனது அலுமினியக் குவளையிலிருந்த அன்றைய வசூலை அப்படியே எடுத்துவந்து பூபதியிடம் தந்தான். அலுமினியத் தட்டில் அதை வாங்கிக்கொண்ட பூபதி, ‘‘நீங்க வேணாம்னு சொன்னாலும் கேக்க மாட்டீங்க... ரொம்ப சந்தோசம் சாமி. நீங்களும் வந்துருங்களேன் எங்க கூட'' என்றான். சந்தோசத்தில் கை விரல்கள் வேகமாய் நடுங்கின. தட்டில் இருந்த காசுகளும் சலசலத்தன. தன் பழைய இடத்தில் வந்து அமராமல் கப்பல் பிள்ளையார் என்று எழுதப்பட்டு இரும்புக் கம்பிகள் கொண்டு அடைத்து அதன் மீது சில்வர் முலாம் பூசி உள்ளே பிள்ளையார் சிலை வைக்கப்பட்டு இருந்த சிறு கோவிலின் படிக்கட்டில் அமர்ந்தவன் பெரிய கோவிலின் பக்கச் சுவரை ஒட்டியபடி திண்ணை வைத்து மரச்சட்டங்கள் கொண்டு அடைத்திருந்த அந்த வீட்டையே பார்த்தபடி இருந்தான். () () () முரளிதரனுக்குத் தன் அம்மா என்றால் அவ்வளவு பிரியம். வீட்டில் எப்போதும் அமைதியாய்த்தான் இருப்பாள் அம்மா. அப்பாவின் ஆக்கிரமிப்பு அந்த வீட்டின் ஒவ்வொரு செல்லிலும் ஊடுருவியிருந்ததைப் போலவே அம்மாவின் மெளனமும் வீடு முழுவதும் நிரம்பியிருக்கும். அம்மா எப்போது பேசியிருப்பாள்? மற்றவர்களிடம் மனம் திறந்து பேசக் கூடிய அளவுக்கு அவளுக்கு சந்தோசப் பகிர்தலோ துயர நினைவுகளோ இருந்ததே இல்லையா என்றொரு கேள்வி முரளியின் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருந்தது. அம்மா பிரமாதமான அழகி. அழகில்லாமல் ஒரு நொடிப்பொழுதும் தன் அம்மாவைக் கண்டதில்லை முரளி. ஆனால் முகத்தில் தேவையற்ற பவுடர் பூச்சோ கண்மை தீற்றலோ இருக்காது. அவ்வளவு ஏன்... பீரோ லாக்கரில் அவ்வளவு தங்க நகைகள் இருந்தும் ஒரு குண்டுமணி தங்கம் அவளின் உடம்பை அலங்கரித்திருக்காது. வாசல் நிறைக்க பெரிதாய் கோலமிடுவாள். சிக்குக் கோலம் போடும்போதெல்லாம் புள்ளிகளுக்கிடையில் வளைந்து நெளிந்து விரையும் அம்மாவின் கோடுகளில் எந்தப் பதற்றமும் சிக்கலும் இருக்காது. மதுசூதனனுக்கும் தெரியும் தன் மனைவி எத்தனை பெரிய அழகியென்று; ஒருபோதும் ஒத்துக்கொள்ள முடியாத ஆண் மன அகங்காரம்தான் அவனுக்குள் நிறைந்திருந்தது. அப்பாவின் திமிரான ஆதிக்கத்துக்கு முன்னால் அம்மாவின் ஒடுங்கிய அமைதி முரளிக்குக் கொஞ்சம் புதிராயிருந்தது. அம்மாவுடன் கோவிலுக்குச் செல்லும்போதெல்லாம் கோவில் நிர்வாகத்தில் ஒருவரும் கணக்குப் பிள்ளையுமான மதுசூதனனின் மனைவி என்ற வகையில் தன் அம்மாவுக்குக் கிடைக்கும் சிறப்பு தரிசனமும் அபிஷேக ஆராதனையும் அம்மா விரும்பி ஏற்றுக்கொண்ட மாதிரி முரளிக்குத் தோன்றாது. கை கூப்பி அம்மனைத் தரிசிக்கும் அம்மாவின் முகத்தில் ஒளிரும் வெளிச்சத்தையே பார்த்துக்கொண்டிருப்பான் முரளி. கூட்டம் இல்லாத வெகு அரிதான சமயங்களில் முரளியைத் தன் அருகில் அமரவைத்துக்கொண்டு மெலிதான குரலில், ‘யாது மாகி நின்றாய்; காளி எங்கும் நீ நிறைந்தாய்...' பாடுவது போலவே குரல் முணுமுணுத்து ஒலிக்கும். கோவில் கருவறை பூசாரிகளும் கூட கனிவுடன் தன் அம்மாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பதை முரளி கவனிப்பான். மூடிய கண்களைத் திறவாமலே முழுவதும் பாடி முடிப்பாள். ஒரு கை முரளியின் உள்ளங்கையைப் பொத்தியபடி இருக்கும். அம்மா ஏதோ அவஸ்தையில் இருக்கிறாள் என்பது மட்டும் வளர்ந்துவந்த முரளிக்குத் தெரிந்திருந்தது. தாலி கட்டிய கணவன்தான் கடைசிவரை கூட வரப்போகிறவன் என்று சொல்லித்தான் மாலதியை புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். இருபது வயது மாலதிக்குத் தாலி கட்டிய மதுசூதனன் நல்லவன்; அழகானவன், மாலதிக்கும் அவனுக்கும் ஐந்து வயதுதான் வித்தியாசம். ஆனால் சட்டெனப் பார்க்க மாலதிக்கு சித்தப்பா என்று சொல்லிவிடலாம் போல் ஒரு முதிர்ச்சி இருக்கும். அதுதான் அவனுக்கான பிரச்சனை என்பதை வந்த சில நாட்களிலேயே புரிந்துகொண்டாள் மாலதி. கணவனும் மனைவியுமாய் வெளியே செல்வதை முழுக்கவே தவிர்த்தான் மதுசூதனன். தன்னை அழகாகவும் பலமானவனாகவும் வெளிக்காட்டிக்கொள்ள முனைப்பாகத் திரிந்த மதுசூதனனுக்குத் தன் மனைவி மாலதியின் அழகும் திறமையும் கண்ணுக்குத் தெரியாமலே போயிற்று. திண்ணையில் நடக்கும் பேச்சு அரட்டைகளில் கூட தன்னைச் சார்ந்துதான் தன் குடும்பம் என்ற ஆண் ஆதிக்கமே மதுசூதனனின் குரலில் ஒலிக்கும். எவருடனும் பேசாமல் தன்னையே வீட்டுக்குள் சுருக்கிக்கொண்டு வாழ்ந்த மாலதிக்கு ஒரே ஆறுதல் முரளிதரனும் அந்தப் பெரிய அம்மன் கோவிலும்தான். ‘‘ஏம் மதுசூதனா... அம்மா எவ்ளோ அருமையா பாடுறாங்க தெரியுமா... நம்ம சீனுவும் வைத்தியும் சிலாகிச்சு சொன்னதாலதான் அன்னிக்கி நானும் போய் நின்னு கேட்டேன். கண்ண மூடி ஒக்காந்து அவங்க தனி உலகத்துல இருந்தபடி ரொம்பச் சின்னக் குரல்ல பாடுறாங்க. காதுக்குள்ள அம்பாள் குரல் கேட்கிற மாதிரி இருந்தது தெரியுமா...'' திண்ணைக் கச்சேரியில் ஒருநாள் கோவிலில் வேலை பார்க்கும் கிருஷ்ணன், மதுசூதனனிடம் சொன்னதும் திரும்பி வீட்டின் உள்ளே பார்த்த மதுசூதனன், ‘‘இந்த ஒலகத்துல பொம்மனாட்டிக்குன்னே தனியா ஒரு இடமிருக்கு; வேலையிருக்கு. அத தாண்டி அவங்கள்லாம் எங்கையும் போகக்கூடாது... அவங்க போனாங்கன்னா பின்ன நாம எதுக்கு ஆம்பளையா மீசைய முறுக்கிட்டுத் திரியணும்...'' ‘‘அதுக்கில்லப்பா... அவங்க திறமையெல்லாம் வீணாப்போகுதேன்னு ஒரு ஆதங்கத்துல சொன்னேன்...'' இவனிடம் பேசிப் புண்ணியமில்லை என்பதுபோல் கிருஷ்ணனின் குரல் இழுத்து தனக்குள் முடிச்சிட்டுக் கொண்டது. ‘‘அவங்க திறமைய சமையல் கட்டுலையும் படுக்கை அறையிலையும் காட்டுனா போதாதா என்ன?'' மதுசூதனனின் குரலில் உலகளவு கேலியும் அலட்சியமும் ஒலித்தது. கிருஷ்ணன் சற்றே திடுக்கிட்டு நிலைப்படியைப் பார்த்தார். முரளி நின்றுகொண்டிருந்தான். ‘‘தம்பி நிக்கிறாரு'' என்றார் தயங்கியபடி. ‘‘நிக்கட்டுமே... அவனும் வளர்ற புள்ளதானே...நல்லது கெட்டது தெரிஞ்சிக்கட்டும்... அப்பதான் பொம்பள முந்தானைய புடிச்சிகிட்டு பின்னால ஓடமாட்டான் நாளைக்கி... கிச்சா ஒனக்கு ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ... ஒடம்பு சொகத்தையும் பொம்மனாட்டிக்கி அளவா குடுத்தாதான் குடும்பத்துல ஆம்படையான சார்ந்து நிப்பா...அள்ளி குடுத்தோம்னு வச்சிக்க ருசி கண்ட பூனையாயிடும்... சுகம் குடுக்குறதுல தான் பெரிய இவனு தலைகனம் ஏறிடும்... தெரிஞ்சிக்க...'' ‘‘ஊருக்கு ஒரு நாக்குன்னா மதுசூதனா ஒனக்கு தனி நாக்குப்பா...புதுசா பேசுவ எதையும்...'' ‘‘நான் புதுசா சொல்லல... நம்ம பாட்டன் முப்பாட்டன் வாழ்ந்த வாழ்க்கைய சொல்றேன்...'' கொஞ்சம் குரல் உயர்த்திதான் பேசினான் மதுசூதனன். வீட்டுக்குள்ளிருந்த மாலதி காதிலும் விழுந்தது. முகம் முழுவதும் பூசிக்கொண்ட மெளனத்துடன் சலனமற்று அமர்ந்திருந்தாள். பீரோவுக்குள்ளிருந்த தங்க நகைகளின் நிச்சலனம் அவளுக்குள் உறைந்திருந்தது. மாலதிக்கென்று மொத்தமே நான்கைந்து புடைவைகள்தான். அவையும் கொடிகளில் காய்ந்துகொண்டிருக்குமே தவிர பீரோவில் அடுக்கிவைக்கப்படும் அளவுக்குக் கிடையாது. அதற்கு நேர்மாறாக பீரோ முழுவதும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விதம்விதமான மதுசூதனனின் உடைகள். முரளியை ஈன்ற பிரசவம் மிகச் சிக்கலானது. மாலதி உடல் ரீதியாய் உருக்குலைந்து போனாள். ஆனால் பிரசவம் முடிந்த மறுநாள் மாலதியைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்த மதுசூதனன் இரண்டு விதமான வாசனையில் மிதந்தான். வெளிநாட்டு பாடி ஸ்ப்ரேக்களும் சென்ட் பாட்டில்களும் அந்த இரும்பு பீரோவின் ஒரு தட்டில் நிறைந்திருக்கும். அதுபோலவே மதுசூதனின் இளமையைத் தக்கவைக்கும் பாதாம் பிஸ்தா அக்ரூட்கள் பீரோவின் ஒரு பகுதியில் தங்கள் இடத்தை அடைத்துக்கொண்டு பவுசைக் காட்டிக் கொண்டிருக்கும். பிரசவம் முடிந்து வீட்டுக்கு வந்த மாலதி ரத்த சோகையில் வெளுத்திருந்தாள். அவளைப் பற்றிய துளி அக்கறையின்றி மதுசூதனன் தன் வழக்கமான ஒப்பனைகளில் மிளிர்ந்தான். தான் நன்றாக இருந்தால் தன் குடும்பம் நன்றாக இருக்குமென்று யாரோ அவனுக்குத் தப்பாகச் சொல்லியிருந்தார்கள். முரளியின் பதினைந்தாவது வயதில் மாலதி வீட்டைவிட்டு ஓடிப்போனாள். பாலுவுக்கும் மாலதிக்கும் ஒரே வயதுதான். ஒருநாள் கோவிலில் கண்மூடி பாடிக்கொண்டிருந்த மாலதி தன்னை யாரோ உற்றுப் பார்ப்பதுபோல் உணர்ந்து பாடுவதை நிறுத்தாமலே கண்களைத் திறந்து பார்த்தாள். அவள் கரம் பற்றியிருந்த முரளியின் கண்களும் பூசாரியின் கண்களும் மூடியபடி இருக்க தன் எதிரில் நின்றபடி தன்னையே பார்த்துக்கொண்டிருந்த பாலுவைக் கண்டாள். பாலுவின் இரு கைகளும் அம்மனைக் கும்பிடுவதுபோல் மாலதியைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டிருந்தன. மாலதி பாடுவதை நிறுத்தவில்லை. அடிக்கடி மாலதி பாடினாள். தினமும் பாலு கோவிலுக்கு வந்தான். கோவில் கணக்கை முடித்துவிட்டு மதுசூதனன் வீட்டுக்கு வந்தபோது மாலதி இல்லை. வெறுமை பளிச்சென்று தெரிந்தது. உள்ளுக்குள் ஏதோ நெருடலாய் உணர்ந்து பீரோவைப் போய் திறக்க பூட்டியிருந்தது. சாவி இல்லை. கொஞ்சம்கூட யோசிக்கவில்லை மதுசூதனன். சுத்தியலைக் கொண்டு கதவின் பிடியில் இறக்கினான். நகைகள் எதுவும் இல்லை. வீட்டுக்கு முரளி வரும்முன்பே சில கணக்குகள் போட்டான் மதுசூதனன். மாலதியின் தம்பி மாரிமுத்து இங்கிருந்து நான்கு கிலோமீட்டர்கள் தள்ளி பொய்யூரில் வசிக்கிறான். மாமா மேல் மரியாதையும் பிரியமும் உள்ளவன். ஃபைனான்ஸ் தொழிலில் வட்டிக்கு விட்டு சம்பாரிக்கும் மாரிமுத்துக்கு ஒருமுறை மதுசூதனனும் பண விஷயமாய் உதவி புரிந்திருக்கிறான். மாரிமுத்துக்கு போன் செய்தான் மதுசூதனன். அரை மணி நேரத்தில் வீட்டு வாசலில் பைக்கை ஸ்டாண்ட் போட்டான் மாரிமுத்து. வாசலில் செருப்பை விசிறிவிட்டவாறே, ‘‘என்ன மாமா என்னாச்சு... ஒடனே வரச் சொன்னீங்க...இன்னும் வசூலே முடியல... யக்கா ஒரு சொம்பு தண்ணி குடு...'' என்றான் கொஞ்சம் சத்தமாகவே. நாற்காலியில் அமரச்சொன்ன மதுசூதனன், ‘‘தண்ணி குடுக்க உன் அக்கா இங்க இல்ல... வீட்ட விட்டு ஓடிட்டா...'' என்றான் அமைதியாய். முகத்தைச் சுருக்கிய மாரிமுத்து, பேன்ட் பாக்கெட்டிலிருந்து கர்ச்சீப் எடுத்து முகத்தைத் துடைத்தவாறே தன் மாமாவை உற்றுப்பார்த்தான். இரு கண்களையும் மூடித் திறந்து தலையை அசைத்தான் மதுசூதனன். ‘‘ரொம்ப நாளாவே டவுட்டாதான் இருந்துது மாப்ள... நான்தான் அலட்சியமா இருந்துட்டேன். உன் மருமவன் டியூசன் முடிஞ்சி வர்ற நேரம்தான். நைஸா பேச்சுக்குடுத்து விசாரி. ஏதாவது தெரியும். நான்லாம் கொஞ்சம் மெரட்டிடுவேன்...'' முரளியிடம் கேட்டதில் எந்தத் தகவலும் கிடைக்காமல் போனது. முரளி தலையில் கை வைத்துக்கொண்டு வீட்டின் மூலையில் அமர்ந்தான். அடிபட்ட புலியாய் வீட்டினுள்ளே அலைந்து கொண்டிருந்த மதுசூதனனையே பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். பசித்தது. வீட்டில் எதுவுமில்லை. தண்ணீர் குடித்துவிட்டு வந்து படுத்துக்கொண்டான். அம்மா ஞாபகம் வந்தது. ‘போதும் இங்கு மாந்தர் வாழும் - பொய்ம்மை வாழ்க்கை யெல்லாம்... ஆதி சக்தி தாயே- என் மீது அருள் புரிந்து காப்பாய்'. முரளியின் காதுக்குள் புரண்டது மாலதியின் வேண்டுதல். அவனின் விரலை இறுகப் பிடித்திருந்த மாலதியின் விரல்கள் இப்போது வேறொரு விரலைப் பற்றிவிட்டதா... இனிமேல் அவ்வளவுதானா அம்மா? போலீஸ் ஸ்டேசனுக்கு போன் செய்து சப் இன்ஸ்பெக்டரைத் தொடர்புகொண்டு பேசினான் மாரிமுத்து. வட்டிக்கு விட்டு சம்பாரிக்கும் வேலையோடு கட்டப் பஞ்சாயத்து வேலைகளும் மாரிமுத்து பார்ப்பதுண்டு. அந்த வகையில் இன்ஸ்பெக்டரும் சப் இன்ஸ்பெக்டரும் பழக்கம். மறுநாள் கோவிலிலிருந்து துப்புக் கிடைத்தது. அம்மனுக்குச் சாத்தப்படும் விசேஷ மாலையைக் கோவிலுக்கு வரும் மாலதியிடம் எப்போதும் கொடுத்து அனுப்புவார்கள். மாலதி வராததால் அன்று இரவு மாலையை வீட்டுக்குக் கொண்டுவந்த கோவிலில் எடுபிடி வேலைகள் பார்க்கும் சிரஞ்சீவி தானாகவே மதுசூதனனிடம் சொன்னான். ‘‘நேத்தே சொல்லணும்னு நெனச்சேன்யா... ரெண்டு நாளைக்கி முன்னாடி நம்ம பூக்கார ஏஜென்டு பன்னீரோட தம்பி பாலுகிட்ட அம்மா பேசிட்டு இருந்தத பாத்தேங்கய்யா. உங்ககிட்ட சொல்லணும்னு தோனிச்சி. அதான்...'' பாலுவைப் பற்றி விசாரித்ததில் சமீபத்தில் விவாகரத்தானவன் என்பது மட்டும் தெரியவந்தது. மற்றபடி அவன் மீது எந்தத் தவறான தகவல்களும் பதியப்படவில்லை. ட்ராவல்ஸ் வைத்து நடத்திக்கொண்டிருக்கும் பாலுவுக்கு திருச்சியில் நிறைய நண்பர்கள் இருப்பதும் தெரியவந்தது. சட்சட்டென்று சங்கிலி இணைப்புகள் விடுபட மாரிமுத்து தனக்கிருந்த செல்வாக்கில் அடுத்த நாளே மாலதியும் பாலுவும் திருச்சியில் தங்கியிருந்த ஒரு வீட்டில் வைத்து இருவரையும் பிடித்தான். புத்தம் புதிதாய் ஒரு தாலி மாலதியின் கழுத்தில் தழையத் தழைய தொங்கிக் கொண்டிருந்தது. கையில் ப்ரேஸ்லெட்டும் கழுத்தில் தங்கச் சங்கிலியுமாய் புது மாப்பிள்ளை பளபளப்பில் இருந்தான் பாலு. மாரிமுத்துவைப் பார்த்ததும் எதுவும் பேசாமல் மாரிமுத்து வந்திருந்த காரிலேயே ஏறி இருவரும் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்தார்கள். ஸ்டேசனில் மதுசூதனன் காத்திருந்தான். இன்ஸ்பெக்டரிடம் கட் அண்ட் ரைட்டாகப் பேசியதோடு மட்டுமில்லாமல் எழுதியும் தந்தான் மதுசூதனன், தனக்கும் மாலதிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லையென்று. நிமிர்ந்து யாரையும் பார்க்கவில்லை. கொண்டுபோன 100 பவுன் நகைகளை மட்டும் அப்படியே திருப்பித்தர வேண்டுமென்று கறாராய் சொன்னான். கையில் வைத்திருந்த பேக்கை இன்ஸ்பெக்டரிடம் தந்தாள் மாலதி. வீட்டுக்கு வந்து பேக்கை பீரோவில் வைத்துப் பூட்டியவன் நடுக்கூடத்தில் மாட்டியிருந்த அவனும் மாலதியும் இருந்த போட்டோவைக் கழற்றி எடுத்துக் கொல்லைப்புற கிணற்றின் உள்ளே தூக்கிப்போட்டான். உபயோகமில்லாத அந்தக் கிணற்றின் ஆழத்தில் கண்ணாடி நொறுங்கும் சத்தம் கேட்டது. அண்டா அண்டாவாகத் தண்ணீரைத் தலையில் ஊற்றிக்கொண்டான். முரளி தன் அப்பாவின் வேகவேகமான மூச்சினையும் வீடெங்கும் ஆக்கிரமித்திருந்த மாலதி இல்லாத அவளின் சுதந்திர மெளனத்தையும் கவனித்தான். வேகமாய் சுற்றிய ஃபேனுக்குக் கீழே நின்றவாறு துண்டால் தலை துவட்டிக்கொண்டே முரளியிடம், ‘‘அம்மாவும் புள்ளையுமா சேர்ந்து அப்பாவுக்கு நல்ல பேர் வாங்கிக் குடுத்துட்டீங்க...'' நிமிர்ந்து பார்த்தான் முரளி. ‘‘ஒனக்குத் தெரியாம இருந்துருக்காது ஒன் அம்மா பண்ணுன காரியம். அந்த ஓடுகாலி முண்டைய தல முழுகிட்டேன்... இனிமே ஒனக்கு அம்மான்னு யாரும் இல்ல... மனசுல வச்சிக்க.'' வாசலில் பைக்கை நிறுத்திய மாரிமுத்து சைடில் மாட்டியிருந்த பையை எடுத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்தான். பையை மதுசூதனனிடம் நீட்டியவன் வாசல்பக்கம் திரும்பியவாறு, ‘‘அப்போ நான் பொறப்படுறேன் மாமா... இன்ஸ்பெக்டருக்கும் சப் இன்ஸ்பெக்டருக்கும் செட்டில் பண்ண வேண்டியத பண்ணிட்டேன். இனிமே பிரச்சனையில்ல'' என்றான். ‘‘டேய் இரு மாப்ள. ரெண்டு பெக் சாப்புட்டுப் போ. அவசரமா போயி என்ன பண்ணப்போறே'' என்றான் மதுசூதனன். பையில் இருந்த மது பாட்டில்களைப் பார்த்தான் முரளி. அன்று நள்ளிரவு இரண்டு மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியேறினான் முரளி. மதுசூதனனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக போதை ஏறிக்கொண்டிருந்தது. தன் முன் வந்து நின்ற முரளியைப் பார்த்தவன், ‘‘ஏன்டா ஒனக்கும் தூக்கம் வரலியா... ச்சும்மா ஓடுனவளையே நெனச்சிட்ருக்காம ஒழுங்கா படிக்கிற வழிய பாரு...போ போய் தூங்கு...'' ‘‘அம்மா எங்கப்பா ஓடுனாங்க... நீங்கதான தொரத்தி வுட்டீங்க...'' பித்தளை டம்ளரின் ச்சில்லிப்பு மதுசூதனனின் உதடுகளைத் தொட்டபடியிருக்க, ‘‘என்னடா ஒளறுறே..?'' மதுவை விழுங்கினான். டேபிளில் ஒரு பேப்பர் மீது கொட்டி வைக்கப்பட்டிருந்த மிக்சரை ஒரு கை அள்ளி வாயில் போட்டு மென்றான். ‘‘அம்மா ஏன் எப்பவும் யார்கிட்டவும் பேசாம அமைதியா இருந்தாங்கன்னு யோசிச்சிருக்கீங்களாப்பா... அவங்க போடுற கோலம், அம்பாள நெனச்சி பாடுற குரல்னு எதையாவது கவனிச்சிருக்கீங்களா... நீங்க நல்லாருந்தா போதும் மத்தவங்க எப்படி போனா என்னங்கிற உங்க சுயநலத்த கவனிக்கவே உங்களுக்கு நேரம் போதலியேப்பா, அப்புறம் எப்படி... நீங்களும் அம்மாவும் பேசியே நான் பாத்ததில்லப்பா... அம்மா ரொம்ப அழகுப்பா அம்பாள் மாதிரி...இனிமே வர மாட்டாங்கள்லப்பா... நீங்க சொல்றதுதான் சரி செய்றதுதான் சரின்னு பேசிப்பேசி சரி எதுன்னே தெரியாம இருந்துட்டீங்க... உங்களுக்கு பீரோ முழுக்க இருக்குற நகைலாம் போதும் வாழ... எனக்கு என் அம்மா வேணும்ப்பா... என்னைப் பத்தி யோசிக்காம போன அம்மாவும் ஒரு சுயநலவாதிதானே... ரொம்ப கசக்குதுப்பா... என் வயசுக்கு இந்தக் கஷ்டம்லாம் அதிகம்ப்பா... நான் எப்டிப்பா வாழப்போறேன்'' கண்கள் கலங்கி கண்ணீர் நழுவியது. அரைகுறை வெளிச்சத்தில் நின்றிருந்த முரளியின் முகம் மதுசூதனனுக்கு போதையின் ஆக்ரமிப்பில் சரியாகத் தெரியவில்லை முரளியின் கண்ணீர் இருளில் தன் ஆறுதலைத் தேடி அலைந்தது. ‘‘யே...அவ ஒரு தப்பான பொம்பள... அவளப்பத்திப் பேசாத... ஒனக்கெல்லாம் தெரியாது. நான் நல்ல புருசனாவும் அப்பாவுமா இப்பவரைக்கும் நடந்துட்டுதான் வரேன். ஏன் ஒனக்கென்ன கொற வச்சேன் சொல்லு... ஒன்ன நல்ல ஸ்கூல்ல சேர்த்து நல்லாதான படிக்க வச்சேன்... அப்புறம் என்னையே எதிர்த்துப் பேசுற...அந்த ஓடுகாலியவே உரிச்சி வச்சி பொறந்துருக்கீல்ல... அப்டித்தான் பேசுவே'' நாக்கு புரள முடியாமல் போதையில் நெளிந்ததில் வார்த்தைகள் நழுவி நழுவி விழுந்தன. ‘‘உங்க கடமைய செஞ்சதுக்கு எதுக்கு பெருமைப்பட்டுக்குறீங்க... நீங்க செய்ற தப்புக்கெல்லாம் உங்க சைடுல ஒரு தப்பான நியாயத்த வச்சிகிட்டு அதுதான் சரின்னு வாழ்றீங்க... உங்கள அப்பான்னு கூப்பிட்டுகிட்டு என்னால இனிமே இங்க இருக்க முடியாது. எனக்கு எதும் வேணாம்... நான் எங்கையாவது போறேன். யாரும் இல்லாம போன வலியை இன்னிக்கி நான் உணர்ற மாதிரி என்னிக்காவது நீங்க உணர்வீங்க. அப்போ யாரும் உங்க பக்கத்துல இருக்க மாட்டாங்க... போறேன்.'' செருப்பு கூட அணியாமல் திண்ணையைக் கடந்து வாசலில் இறங்கி இருளில் கரைந்தவனைக் கையில் பிடித்திருந்த டம்ளரில் ரேகைகள் இறுகப் பார்த்துக்கொண்டிருந்தான் மதுசூதனன். () () () ஒன்பது வருடங்கள் கழித்துத் திரும்பிவந்தான் முரளி அதே அம்மன் கோவிலுக்கு. வாசலில் இருந்த யாசகர்களோடு யாசகனாய் ஒடுங்கினான். இடுப்பில் ஒரு காவி வேட்டி; மார்பை மூடியபடி ஒரு காவி வேட்டி, அவ்வளவுதான் அவன் இருப்பு. உருண்டையான சிவந்த முகத்தில் மண்டியிருந்த அடர் கறுப்பு தாடியும் மீசையும் பால் கண்களில் ஒளிரும் வெளிச்சமும் அவனை முற்றும் துறந்த சித்தன் அளவுக்கு அடையாளம் காட்டின. முரளி அப்படித்தான் இருந்தான். இரு கைகளையும் ஏந்தி பிச்சை கேட்டவனிடம் அருகில் அமர்ந்திருந்த செல்வம்தான் ஒரு அலுமினிய குவளையைத் தந்தான். கோவிலிலே தரப்படும் ஒரு வேளை அன்னதான உணவு முரளிக்கு இரண்டு வேளைக்குப் போதுமானதாயிருந்தது. அதைச் சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக்கொண்டான். இரவு கோவில் வாசலில் படுக்கும் முன் அன்று தனக்கு யாசகமாய் வந்த காசுகளை செல்வத்திடம் தந்துவிடுவான். தொடக்கத்தில் செல்வம் கேட்ட எந்தக் கேள்விக்கும் முரளி பதில் சொல்லவில்லை. ஆனால் முரளியின் கண்களில் தெரிந்த அமைதியைக் கண்டு மேற்கொண்டு எதுவும் செல்வம் கேட்கவில்லை. செல்வம்தான் முரளியை ஊமைச்சாமி என்று கூப்பிடத் தொடங்கினான். சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாகத் தொடங்கியது. திருவிழாவின் ஒரு நாளான பூச்சொரிதல் அன்றுதான் மாலதியைப் பார்த்தான் முரளி. பூப் பல்லக்கில் அமரவைத்து வருடத்துக்கொருமுறை கர்ப்பக்கிரக அம்மன் வெளியில் வந்து தரிசனம் தரும் நாள் அது. கையில் வைத்திருக்கும் அலுமினிய டம்ளரை உயர்த்தி யாசகம் கேட்கும் முரளி ஒருபோதும் தர்மம் இடுபவரின் முகத்தைப் பார்க்க மாட்டான். அன்று பல்லக்கில் ஆடிக்கொண்டிருந்த அம்மனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அம்மனைப் பார்த்துவிட்டு தலை குனிந்தவனின் கண்களில் சந்தன நிறத்தில் வெள்ளிக் கொலுசுகள் அணிந்த கால்கள் கடந்தன. அவன் முகம் அவனை மீறி வான் நோக்கியது. மாலதி. அம்மா... முரளியின் கண்கள் வெறித்துச் சுழன்றன. மாலதி கழுத்து நிறைய நகை அணிந்திருந்தாள். தலை நிறைய மல்லிகைப் பந்து அடர்ந்திருந்தது. ரோஸ் நிற உதடுகளில் நிரந்தரமான புன்னகை உறைந்திருந்தது. கன்னங்கள் சற்றே உப்பியிருந்தன. சாயங்காலத்தில் லேசாய் உறங்கியிருக்க வேண்டும். அந்த மென் சோக அலுப்பு கண்களில் படர்ந்திருந்தது. முரளியை நோக்கிக் குனிந்திருந்த முகத்தில் எந்தவிதக் கேள்வியும் இல்லை. தெள்ளத் தெளிவாக மாலதியைப் பார்த்தான். அவளின் கையைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்த ஐந்து வயதுச் சிறுவனின் கையில் காசுகளைத் திணித்து எல்லா யாசகர்களுக்கும் போடச்சொல்லிக் கொண்டிருந்தாள். அவசர அவசரமாகத் தலையைக் குனிந்துகொண்டான் முரளி. பல வருடங்களுக்குப் பிறகு தன் நெஞ்சுக்கூடு நடுங்குவதை உணர்ந்தான். தன் மார்பினைப் போர்த்தியிருந்த காவி வேட்டியின் முனையை இரு கைகளாலும் இறுகப் பிடித்துக்கொண்டான். அந்தச் சிறுவன் ஒவ்வொரு யாசகரிடமும் சென்று காசுகளைத் தந்து கொண்டிருந்தான். அலுமினியத் தட்டுகளிலும் டம்ளர்களிலும் அவனின் பிஞ்சு விரல்கள் தானமிட்டுக்கொண்டிருந்தன. வயதான மெலிந்த கைகள் அச்சிறுவனுக்கு ஆசி வழங்கின. முரளியிடம் சென்ற சிறுவன் எங்கு காசு வைப்பது என்று தெரியாமல் தடுமாறினான். ‘‘ஊமச்சாமி... பையன் காசு தர்றாரு பாருங்க...'' அருகிலிருந்த பூபதியின் குரலில் கலைந்த முரளி வேட்டியை விட்டுவிட்டு இரு கைகளையும் ஏந்தினான். அவனின் உள்ளங்கையில் மோதியது காசு வைத்திருந்த சிறுவனின் விரல்கள். அம்மாவின் விரல்கள். இந்த விரல்கள்தானே இந்த ஆலயம் முழுவதும் தன்னை இழுத்துக்கொண்டு அலைந்தது. இந்த விரல்கள்தானே தன் தலைமுடியைக் கோதி தன்னை உறங்க வைத்தது. ஒவ்வொரு முறையும் தன்னை மறந்து பாடல் பாடும்போது இந்த விரல்கள்தானே தன் உள்ளங்கைக்குள் குவிந்திருக்கும். ‘யாது மாகி நின்றாய்...காளி எங்கும் நீ நிறைந்தாய்...' அய்யோ... அம்மா... தன் இதயத்தை வருடிக்கொண்டிருந்த அந்தப் பிஞ்சுவிரல்களை அப்படியே பற்றி தன் உதடுகளில் பொருத்திக்கொள்ளத் துடித்தான் முரளி. ‘‘சஞ்சய் வா... காசு போட்டுட்டு வா...'' முரளியின் காதுகளில் விழுந்தது எத்தனையோ ஜென்மங்களுக்குப் பிறகு அவனை வந்தடைந்த உயிரின் குரல். அவனின் உள்ளங்கையிலிருந்து விலகி விரைந்தது கரம். உலகம் உடைந்தது. பல வருடங்களுக்குப் பிறகு அன்றிரவு அழுதபடி விழித்துக்கொண்டிருந்தது நடை சாத்தப்பட்ட கோவிலினுள்ளே தெய்வம். கடல் சார்ந்த ஊர் என்பதால் சர்ப்பபுரியில் ஆடி மாதம் வந்தாலே காற்று பிய்த்துக்கொண்டு போகும். ஓர் இரவு காற்றும் மழையும் இடியும் சேர்ந்து ஊரை மிரட்டியதில் கோவில் வாசலில் இருந்த யாசகர்கள் தற்காலிக அடைக்கலமாக மதுசூதனன் வீட்டுத் திண்ணைக்கு வெளியே ஒடுங்கினர். முன்பு திறந்த வெளியாயிருந்த சிமென்ட் திண்ணை இப்போது மரச் சட்டங்கள் கொண்டு மூடப்பட்டிருந்தன. வாசலை ஒட்டியிருந்த சிறு மறைப்பில் அனைவரும் ஒதுங்கியிருந்தனர். கோவிலுக்கும் வீட்டுக்குமான கொஞ்சம் இடைவெளியில் முரளி கால் முட்டிகளைச் சேர்த்து அணைத்தபடி அமர்ந்துகொண்டான். அன்று இரவு மதுசூதனன் வீட்டிலிருந்து தயாரான உணவு தஞ்சம் புகுந்தவர்களுக்கு வீட்டு வாசலில் வைத்து வழங்கப்பட்டது. சிறு வாழை இலையில் சூடாய் சக்கரைப் பொங்கலும் புளி சாதமும் வைத்து வரதன் தான் அனைவருக்கும் வழங்கினார். முரளியை அழைத்து இலையைத் தந்தபோது திண்ணையில் அமர்ந்துகொண்டு எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மதுசூதனனை நிமிர்ந்து பார்த்தான் முரளி. அவனுக்குத் தெரியும்... இலையைப் பெற்றுக்கொண்டு சீக்கிரமே அங்கிருந்து நகர்ந்து வந்துவிடவேண்டும் என்று நினைத்துப் போனவன்தான் திண்ணையில் அமர்ந்திருந்த மதுசூதனன் அருகில் ஒரு பெண்ணுருவம் அசைவதுபோல் உணர்ந்து நிமிர்ந்து பார்த்துவிட்டான். அந்த அவசர அன்னதானம் மதுசூதனனின் இரண்டாம் மனைவியின் ஏற்பாடு. முரளியின் முகத்தை நேருக்கு நேராக எதிர்கொண்டான் மதுசூதனன். அந்தக் கண்கள்... தாடி அடர்ந்திருந்தாலும் செழுமையான சிவந்த கன்னங்கள்... யாசகனாக ஆனபின்னும் முரளிக்கு முகப்பொலிவு குறையவில்லை. மனதை இறுக்கி நிசப்தத்துக்குள் தொலைந்ததில் இன்னும் தெய்வீக ஒளி கூடத்தான் செய்திருந்தது. அந்த முகம் மாலதியின் முகம். அதைத்தான் எதிர்கொண்டான் மதுசூதனன். இதயத்தில் சுருக்கென்றது ஒரு பயம். முரளி என்று அழைக்கப்போனவன் சூழல் உணர்ந்து தன்னை இறுக்கிக்கொண்டான். அவசர அவசரமாய் அங்கிருந்து விலகினான் முரளி. மழை ஓய்ந்த மறுநாள் சாயங்காலம் கோவில் வாசலில் அமர்ந்திருந்தபோது மதுசூதனன் வீட்டு வாசலில் ஆம்புலன்ஸ் வந்து நின்று செல்வதைப் பார்த்தான் முரளி. அன்றிரவு பூபதியிடம் செல்வம் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. ‘‘கோவில் கணக்குப் புள்ளைக்கி நேத்து வாதம் அடிச்சிடுச்சாம்யா... ஒரு கையும் காலும் இழுத்து வாய் பேச முடியலியாம். அன்சாரி ஆஸ்பத்திரில சேத்துருக்காங்களாம். ப்ச் பாவம் நல்ல மனுசன். நேத்து அவர் வீட்டுல வச்சி சோறு போட்டாரு. மொத சம்சாரம் ஓடிப்போயிடுச்சாம். ரெண்டாவதா கட்டினவங்களுக்கு புள்ள இல்லைனு பேசிக்கிட்டாங்க. பாவம் போ நல்ல மனுசங்களுக்குத்தான் சோதனையே வருது...'' முரளிக்குத் தான் வந்த நோக்கம் புரிபடத் தொடங்கியது. ஆஸ்பத்திரிக்குச் சென்றபோது இரவு மணி ஏழு. உள்ளே நுழைந்ததும் இடது புறமாய் தெரிந்த அறை ஒன்றின் வாசலில் அன்று பார்த்த அந்த அம்மாளின் முகம் தெரிந்து மறைந்தது. அறை நோக்கிச் சென்றான். முரளியின் சுத்தமான முகமும் கருணை வழிந்த கண்களும் அறை உள்ளே அனுமதிக்கச் செய்தன. ‘‘அவரால பேச முடியாது. நீங்க அவருக்காகப் பிரார்த்தனை பண்ணுங்க சாமி...'' முரளி தலையாட்டினான். மதுசூதனன் உடல் ஒரு பக்கமாய் திரும்பியிருந்தது. சலைன் பாட்டில் ஏறிக்கொண்டிருந்த கை சாதாரணமாக நீண்டிருக்க வலதுகை மணிக்கட்டு வளைந்து ஐந்து விரல்களும் உள்ளங்கையை நோக்கி குவிந்திருந்தன. வாயிலிருந்து எச்சில் வடிந்து கொண்டிருந்தது. வலது கால் துணி போட்டு மூடியிருந்தாலும் அதன் இயல்பற்ற தோற்றம் வெளித்தெரிந்தது. முரளியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த கண்களில் மட்டும் அந்தத் தன்னகங்காரம் குறையவில்லை. வாசல் கதவருகில் அந்தப் பெண்மணி நின்று கொண்டிருக்க மதுசூதனன் காதோரமாய் முரளி குனிந்து உதடுகள் அசைத்தான். ‘‘மன்னிச்சிடுங்க.'' நிமிர்ந்தான். விலகினான். மதுசூதனன் கண்களிலிருந்து நீர் வழியத் தொடங்கியது. () () () அன்றிலிருந்து நான்கு மாதங்கள் உயிரோடு இருந்தான் மதுசூதனன். எப்போதும் போல கோவில் வாசலிலே யாசகம் பெற்று வாழ்ந்துகொண்டிருந்தான் முரளி. மாலதியை அதற்குப் பிறகு அவன் பார்க்கவில்லை. மதுசூதனனின் இரண்டாவது மனைவி கோவிலுக்கு வரும்போதெல்லாம் முரளிக்கும் தர்மமிடுவார். தலை நிமிராமல் பெற்றுக்கொள்வான். முரளியின் மனதில் பழைய ஞாபகங்கள் எதுவுமில்லை. சுயநலமும் தான் என்ற தலைகனமும் நிரம்பிய ஒருவனின் வித்து இவ்வுலகையே உதறி வாழ்ந்துகொண்டிருப்பது குறித்து எவ்விதப் பிரக்ஞையுமில்லை. இவ்வுலகில் அவனுக்கென்று யாருமில்லை; அவனுக்கென்று எதுவுமில்லை, அப்படி கிடைக்கும் எதுவும் நிரந்தரமில்லை என்பதைத் தன் இருபத்து நான்காவது வயதில் உணர்ந்த முரளிதரன் என்கிற ஊமைச்சாமி சாகும்வரை அந்தக் கோவில் வாசலிலேயே ஒரு யாசகனாய் இருந்தான், உள்ளே வீற்றிருக்கும் அம்மனுக்குத் தினந்தோறும் குற்ற உணர்வினை அள்ளி வழங்கியபடி. - ஆனந்த விகடன்

Tuesday 2 May 2023

வாலின் நிழல் முன்னோட்டம்

துறவியின் கனவுக்குள் மழை பெய்து கொண்டே இருந்தது. தன் நெற்றிக்கு மேலே நெருங்கி வந்துவிட்ட வானத்தைத் தொட்டு இரு கைகளால் இழுத்தவர் இமைகளைத் திறந்தார். ஒருக்களித்துப் படுத்திருந்தார். விழித்ததும் தொடையிலும் புட்டத்திலும் எரிச்சலுடன் கூடிய வலி அலை பாய்ந்து கொண்டிருந்ததை உணர்ந்தார். மழையின் சத்தம் அதிகரித்திருந்தது. வானம் இருளிலிருந்து சாம்பல் நிறத்துக்கு மாறியிருந்தது. புரண்டு படுத்து இரு கைகளையும் ஈர நிலத்தில் ஊன்றி எழுந்தார். தன் நிர்வாணம் கண்ணுக்குத் தெரிந்ததும் விழி பதறி மறைப்பதற்காக துணி ஏதும் கிடைக்குமாவென சுற்றும் முற்றும் பார்த்தார். பார்த்த இடங்களிலெல்லாம் பிணங்கள்... பிணங்கள்... பிணங்கள். பெரும்பாலும் நிர்வாண உடல்கள். ஆண் பிணங்கள் புட்டம் காட்டிக்கொண்டும் மல்லாந்து குறியினைக் காட்டிக்கொண்டும் கிடந்தன. துறவியின் முதுகில் ஒருவித நடுக்கம் உருவாகி தடதடக்கத் தொடங்கியிருந்தது. பாவாடை ரவிக்கையுடன் மட்டும் ஒதுங்கியிருந்த ஒரு பேரிளம் பெண்ணின் சடலத்தை நோக்கிச் சென்றார். பிணத்தின் இடுப்பில் கை வைத்துத் தேடி பாவாடை முடிச்சை நெகிழ்த்தினார். கண்களை இறுக்க மூடிக்கொண்டு பாவாடையை அவிழ்த்தார்; உருவினார். துணி விலகியதும் தெரிந்த தொடைப்பகுதி முழுவதும் சேற்றுக்கரைசல் கறுப்பாய் அப்பியிருந்தது. மழை ஆவேசமாய் அதன் மேல் விழுந்து கழுவத் தொடங்கியது. தன் இடுப்பைச் சுற்றி பாவாடையை இறுகக் கட்டினார். நிர்வாணம் மறைந்ததும் நடுக்கம் நின்றது. இரண்டு புறமும் நீளமான கடல் கரை மட்டும் தெரிந்தது. ஐம்பதடி தூரத்தில் சீற்றம் குறைந்த அலைகள் கடலில் மிதந்து கொண்டிருந்த குப்பைகளை கரையில் தள்ளிக் கொண்டிருந்தன. பிரதேசமெங்கும் கறுப்பு நிற மண்ணும் அழுகல் வீச்சமும் மிதந்து கொண்டிருந்தன. மழையின் ஊடே செவிகளைக் கூர்மையாக்கினார் துறவி. இடதுபுறமாக மனிதர்களின் அலறல்கள் கேட்டன. திரும்பி நடக்கத் தொடங்கினார். காலோடு ஒட்டிய ஈரப்பாவாடை நடையைத் தடுமாற வைத்தது. வானம் சாம்பலை உதறி நீல நிறத்தினைக் கொஞ்சமாய் பூசிக்கொள்ளத் தொடங்கியது. மழையும் நிறம் மாறி வெள்ளையாய் பெய்து கொண்டிருந்தது. நேர் பார்வையில் நடந்தவரின் இடதுபுறம் மழையில் நனைந்து கொண்டிருந்தது கடல். வலதுபுறம் அங்கங்கே உடல்கள் ஒதுங்கிக் கிடந்தன. உடைந்து சிதறிய கட்டுமரங்களும் படகுகளும் வேறு ஏதேதோ பெயர் அறியா இரும்புப் பொருள்களும் சேற்றோடு சேர்ந்து கிடந்தன. திடீரென்று துறவியின் கண்களில் அந்த வெள்ளை உருவம் தென்பட்டது. பிணங்களின் நடுவில் தென்பட்ட உடலைப் பார்த்து ஓடினார். வாய் தன்னிச்சையாக அலறியது. ‘‘நிவே...''. நடை ஓட்டமாய் மாறியதில் கால் தடுக்கி விழுந்தார். ரத்தம் வந்து கொண்டிருந்த தொடையிலிருந்து மூளைக்கு ஒரு இனம் புரியாத வலி பரவியது. எழுந்தார். ஒரு கையால் பாவாடையைப் பிடித்துக்கொண்டு வெண்ணிற உடல் நோக்கி ஓடினார். அருகில் செல்லச் செல்ல அது நிவேதிதா இல்லை என்று தெரிந்ததும் நிதானித்தார். சென்று நின்று மூச்சு வாங்கினார். யாரோ ஒரு வெளிநாட்டுப் பெண்மணியின் உடல் மீது மழை வேகமாய் பெய்து கொண்டிருந்தது. கழுத்தை உயர்த்தி வானம் பார்த்து அண்ணாந்து, ‘‘நிவே...'' என்று அலறினார். தான் கடைசியாய் பார்த்துப் பேசிய தொட்டு உணர்ந்த நிவேதிதாவின் முகமும் ஸ்பரிஸமும் குரலும் மட்டுமே துறவியின் மூளைக்குள் உறைந்திருந்தது. கடலில் மிதந்து வந்த உடலொன்றை அலை கரையில் ஒதுக்கியதைப் பார்த்தவர் அதனை நோக்கி ஓடினார். தண்ணீரில் கால் வைத்து உடலைப் புரட்டினார். அவரைப் போன்ற ஒரு துறவி. கழுத்து ருத்ராட்சத்தினை கையால் இறுகப் பிடித்தபடி இறந்து போயிருந்த அம்மணச் சடலம். ‘‘இறைவா...'' துறவியின் உதடுகள் நடுங்கின. இன்னொரு அலை அவரின் கால்களை மோதி பாதத்துக்குக் கீழிருந்த மண்ணை உருவியதும் உடல் பலவீனத்தில் தடுமாறி தண்ணீரில் விழுந்தார். மறு அலை அவரின் கைகளில் எதையோ தள்ளியது. துறவி கையில் எடுத்து உயர்த்திப் பார்த்தார். துருப்பிடித்து இரும்புச் செதில்கள் உதிர்ந்த சூலம். சூலத்தின் மூன்று கூர்மையுமே உடைந்திருந்தாலும் துருப்பிடித்த பகுதி கத்தியை விட அபாயமாய் நீண்டிருந்தது. துறவி சூலத்தை உயர்த்தியதுமே இரண்டாய் முறிந்து பாதி கடலிலேயே விழுந்தது. மூன்று கூர்மை இருந்த பாகம் மட்டும் துறவி கையில் இருந்தது. கையில் பிடித்தபடி கடலையே உற்றுப் பார்த்தவர் திடீரென்று வெறி பிடித்ததுபோல் கடல் நீருக்குள் சூலத்தால் ஓங்கி ஓங்கி குத்தினார். கடல் நீரினைக் கிழித்து கிழித்து கடலுக்குள்ளேயே எறிந்தது ஆயுதம். சட்டென்று எழுந்து சூலத்துடன் மழையைக் கிழித்தபடி ஓடத் தொடங்கினார். களைத்து நின்ற இடத்தில் பிணங்கள் குவியலாய் ஒதுங்கியிருந்தன. ‘‘நிவே...'' என்றார். கண்கள் கலங்கின. மழை தன் வீரியம் குறைத்து மெலிதாய் பெய்யத் தொடங்கியது. பிணங்களின் நடுவில் கால் வைத்து நடந்தவரின் கண்கள் கூர்மையாகின. ‘‘ப்ளீஸ் சேவ் மீ...'' குரல் முணுமுணுப்பாய் கேட்டது அவர் செவிகளில். குனிந்து பிணங்களின் ஊடே பார்த்தபடி நடந்தார். நிவேவின் குரல். அவரின் உதடுகள் நிறுத்தாமல் முணுமுணுக்கத் தொடங்கின. ‘‘நிவே... நிவே... நிவே... நிவே... நிவே... நிவே... நிவே... நிவே.... நிவே... நிவே... நிவே... நிவே... நிவே... நிவே... நிவே... நிவே....நிவே நிவே... நிவே... நிவே... நிவே... நிவே... நிவே... நிவே....நிவே... நிவே... நிவே... நிவே... நிவே... நிவே... நிவே... நிவே....நிவே நிவே... நிவே... நிவே... நிவே... நிவே... நிவே... நிவே....'' மந்திரம் போல் உச்சரித்துக் கொண்டிருந்தார். நிலம் நோக்கி முகம் புதைத்திருந்த ஒரு உடலிலிருந்துதான் அந்த வேண்டுதல் வந்தது. கையில் வைத்திருந்த சூலத்தால் உடல்களைப் புரட்டிக்கொண்டே வந்தார். ‘‘சேவ் மீ ப்ளீஸ்... காப்பாத்துங்க... தண்ணி...'' மிக அருகில் கேட்டது. குனிந்து அந்த உருவத்தைப் புரட்டினார். மண்ணில் புதைந்திருந்த முகம் திரும்பியதும் அந்த முகத்தைக் கவ்விக் கொண்டிருந்த நண்டு அளவிலான விஷக் கடல்பூச்சி ஒன்று விலகி ஓடியது. பாதி முகம் ரத்தத்தில் ஊறிப் போயிருந்தது. மல்லாந்து வானம் பார்த்ததுமே அவசரமாக அதன் மீது மழை விழுந்து கழுவத் தொடங்கியது. நிவேதிதா இல்லை. யாரோ ஒரு பெண்... நிவேதிதா போலவே. தொண்டை ஒருமுறை அசைந்தது. ‘‘ப்ளீஸ் சேவ் மீ...'' உதடுகள் துடித்தன. துறவியின் கண்களில் சிறு நடுக்கம். புருவங்கள் அசைய பெரிதாய் மூச்சு விட்டபடி கையிலிருந்த துரு பிடித்த சூலத்தை வேகமாய் அந்த தொண்டைக்குழியில் இறக்கினார். சூலம் புதைந்த இடத்தில் ரத்தம் வெளியேறி மழைநீரில் கலந்து ஓடத் தொடங்கியது. சூலத்தை உருவி எடுத்தவர் உடல் பதற பதற கடல் ஓரமாவே ஓடினார். கட்டியிருந்த பாவாடை அவிழ்ந்து விழுந்தது. நீண்ட தலைமுடி முகத்திலும் முதுகிலும் படிந்திருக்க சூலத்தில் ரத்தம் சொட்டச் சொட்ட நிர்வாணமாக ஓடியவர் வானம் பார்த்துக் கத்தினார். ‘‘நிவே... இந்த மண்ணுல இனிமே மனுசங்க வாழ மாட்டாங்க...பேய்களுக்கும் பிசாசுகளுக்கும் பைத்தியங்களுக்கும்தான் இனிமே இது பூமி. எந்த ஜீவராசியும் இந்த மண்ணுல நிலையான மனசோட வாழ முடியாது... இதெல்லாம் நீர் முனியோட முந்தைய ஜென்ம சாபம்...'' தொண்டை நரம்புகள் புடைக்க கத்தியவர் சூலத்தைக் காற்றில் உயர்த்தி ஆவேசமாய் தன் அடிவயிற்றில் இறக்கினார். வயிற்றைப் பொத்துக்கொண்டு முதுகுப் பக்கமாய் வெளியேறிய சூலத்தின் முனையில் ரத்தம் கொப்பளிக்க குடல்கள் வெளிவந்தன. தடுமாறி அப்படியே குப்புற விழுந்தவர் ரத்தமாய் வாயில் எடுத்தார். இரு கைகளையும் விரித்தபடி மணலில் படுத்தார். முதுகுப்புறமாய் வெளிவந்து வானம் பார்த்திருந்த சூலத்தின் ரத்தத்தினை தனுஷ்கோடியின் மழை கண்ணீருடன் கழுவத் தொடங்கியது.

ஹாப்பி பர்த்டே சுஜாதா சார்

சுஜாதா பிறந்த நாளும் நினைவு நாளும் என் எழுத்துலக வாழ்க்கையில் மறக்க முடியாத முக்கியமான நாட்களாகும். சமீப காலமாக இரண்டு நாட்களும் இன்று என்பதும் இன்னொரு நாளே என்றபடி கடந்து போகிறன்றன. மற்றபடி புதிதாய் பிறந்திட வேண்டும் சார்.

Wednesday 17 November 2021

பாம்புகளின் கோடை

பாம்புகளின் கோடை மழை முடித்து கோடை துவக்கம் காடுகளில் வாழ்ந்த பாம்புகளெல்லாம் சூடு தாங்காமல் வெளியேறத் துவங்கி விட்டன குளங்களில் நீரில்லை பாம்புகளின் தாகமோ பெரிது அறுவடை இல்லாத வயல்களிலும் நிழலுக்கெனவே வளரும் கருவேல மரங்களையும் வேட்டிவிட்டார்கள் காய்ந்த விறகுக்கென பசிக்கு இரையும் அருந்த நீரும் இணைய துணையும் கிடைக்காத பாம்புகளை கல்லால் அடித்து கொல்கின்றனர் சிறுவர்கள் அப்போதெல்லாம் இப்படியில்லை ஏரிகள் குளங்கள் குட்டைகளென பாம்புகளின் வாழ்க்கை நர்த்தனங்களோடிருந்தது மழைநீர் சேகரிப்புத் தொட்டிக்குள் கருகிக் கிடக்கின்றன பாம்பின் சட்டைகள் இப்போது

Monday 8 July 2019

பால்

கதை





‘‘ நம்மைக் கடந்து செல்லும் பாம்பு என்பது பாம்பாகத்தான் பார்க்கப்படுகிறதே தவிர இது ஆண்பாம்பா பெண்பாம்பா என்றெல்லாம் பார்க்கப்படுவதில்லை. ஆணோ பெண்ணோ எது தீண்டினாலும் மரணம் உறுதி. அதேபோல் ஆணோ பெண்ணோ பாம்புகளில் ரெண்டும் அழகு. பெரும்பாலும் நாம் சினிமாவில் காட்டப்படும் ரப்பர் பாம்பு அல்லது கிராபிக்ஸ் பாம்பைப் பார்த்திருப்போம். அல்லது சர்க்கஸில் பார்வைக்கு வைக்கப்படும் பல் பிடுங்கப்பட்ட பாம்புகளை. அவை அநேகமாக எனக்கு அருவருப்பைத்தான் உண்டு பண்ணியிருக்கின்றன. வயல் வெளிகளில் நீர்க்கரையில் எதேச்சையாக நம் கொல்லைப்புறத்தில் தென்பட்டுவிடும் பாம்புகளை பாதுகாப்பான இடத்தில் இருந்துகொண்டு நின்று நிதானித்து ரசித்திருக்கிறாயா...அவ்வளவு அழகு. நம்மைப்போல்’’ அவன் கண்களில் பாம்பின் சிரிப்பு. ‘‘ பாம்பாட்டிகள் சில சமயங்களில் பல் பிடுங்குவதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மகுடி நிறமும் பாம்பின் நிறமும் பாம்பு உறங்கும் கூடையின் நிறமும் ஒரே மாதிரி இருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். மனிதர்களுக்கு ஆணென்ன... பெண்ணென்ன... பாம்பு. அவ்வளவுதான். நம்மைப்போல்’’ பெரிதாகச் சிரித்தான் இவன்.

அவனின் வாயிலிருந்த மதுவைக் கொப்பளித்து இவனின் உதடுகளில் ஒட்டிப் பொருத்தி திறந்த இவனின் வாயினுள் கொஞ்சம் கொஞ்சமாகப் புகட்டினான். கண்களை மூடி அவன் வாயிலிருந்து தன் நாக்கில் பட்டு இறங்கும் மதுச் சுவையை ரசித்து விழுங்கிய இவன், தொண்டைக்குள் இறங்கிய அவனின் எச்சிலை மதுவிலிருந்து பிரித்து ரசித்தான். அவனுக்குத் தெரியும் இவனின் எச்சிலின் தனித்தன்மை. அது சற்றே சூடாய், வெகு சொற்பமான தருணங்களில் மட்டுமே நுரையுடன் கூடிய எச்சில் இவன் நாக்கில் படும். பெரும்பாலும் அவனின் உதடுகளுக்குள்ளிருந்து நாக்கின் அடியிலும் பற்களிலும் ஈறுகளிலும் நாக்கிலும் என்று இவன்தான் பிசுபிசுப்பான திரவத்தை சேகரித்து விழுங்குவான்.   

 ‘‘ நம்மில் ஆண் யார்? பெண் யார்?’’

‘‘ இது என்ன மிக அபத்தமான கேள்வி.ஆமாம் ஏன் திடீரென்று?’’

 ‘‘ ஒரு கட்டுரையில் படித்தேன். ஆண் ஆணாகவும் பெண் பெண்ணாகவும் இருந்து புணர முடியாது என்று. அப்படியென்றால் நம்மில் யார் ஆண்? யார் பெண்?’’

‘‘ சிரிப்புதான் வருகிறது. நம்மில் யாருமே பெண்ணில்லை. நீ எனக்கான ஆண். நான் உனக்கான ஆண்.எப்போதாவது உன் வாசனையை நீ உணர்ந்திருக்கிறாயா?’’

‘‘ ம்...பலமுறை’’

‘‘ அனுபவித்து...?’’

‘‘ யெஸ். மிகவும் பிடிக்கும் எனக்கு. அழுக்கைக்கூட நுகர்ந்திருக்கிறேன். குறிப்பாக...’’

‘‘ போதும்... அதேதான். உன் வாசனை உனக்குப் பிடிக்கிறது. உன்னை நீ ரசிக்கிறாய். என் வாசனை எனக்குப் பிடிக்கிறது. என்னை நான் ரசிக்கிறேன். என்னைப் போலவே வாசனை உள்ள உன்னை நான் ரசிக்கிறேன். உன்னைப் போலவே வாசனை உள்ள என்னை நீ ரசிக்கிறாய். அவ்வளவுதான்.’’

இவனின் கக்கத்து முடிகள் மழிக்கப்பட்டு லேசாக வியர்வை தென்படும் தோலில் அவன் உதடுகள் பொருத்தி சப்பிக் கடிக்கும்போதும் அதே கக்கத்தில் ரோமங்கள் நீக்காமல் வியர்வை காய்ந்து வெளிப்படும் அவனின் அப்பட்டமான மணத்தை ஒளித்து வைத்திருக்கும் அவ்விடத்தில் முகம் புதைத்து நாவால் தீண்டி ஈரப்படுத்தி மீண்டும் மீண்டும் நுகர்ந்து ரோமங்களைப் பற்களால் கடித்து இழுத்து...

‘‘ கடவுள் ஆணைப் படைக்கும்போது அலட்சியமாகவும் பெண்ணைப் படைக்கும்போது அதி சிரத்தையாக கவனமாகவும் படைத்திருப்பானோ?’’

‘‘ ஹா ஹ... உனது சந்தேகத்தைத் தீர்க்கும் வழியில் எனது சந்தேகத்தையும் தீர்த்துக்கொள்கிறேன் எப்போதும். எந்த விதத்தில் பெண்ணைவிட ஆண் தாழ்ந்துவிட்டான்?’’

‘‘ குழந்தை பெற்றுக்கொள்ளும் வழியில்...’’

‘‘ ஷிட்...பெண் தானாகவே பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாது தெரியுமா...ஒரு ஆண் வேண்டும் அதற்கும்.’’

‘‘ குழந்தையைத் தாங்கும் சக்தியும் பெற்றுக்கொள்ளும் வலிமையும் பெண்ணுக்குத்தானே தந்திருக்கிறான்.’’

‘‘ இதெல்லாம் பழங்கதை. இன்னும் நீ இதையெல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறாயா...சரி ஆணுக்கு கர்ப்பப்பை தராத கடவுள் எதற்கு மார்பகங்களைத் தந்திருக்கிறான்?’’

‘‘ எதற்கு?’’

‘‘ இதற்குத்தான்’’ என்றபடி அவனுக்கு வலதுபுறம் படுத்திருந்த இவன் ஒரு தாவு தாவி அவனின் மேல் படர்ந்தான். அவனின் இடது மார்பின் மீது தன் மீசையால் லேசாகத் தீண்டினான். தனது நாசியால் மார்பின் மேலும் கீழும் இடதுபுறம் வலதுபுறம் சுவாசித்தவன் மார்புக் காம்பினைத் தனது மேல் கீழ் உதடுகளால் கவ்வி சப்பத் தொடங்கினான்.  குழந்தை பால் குடிப்பதைப் போல் காம்பினை மென்றபடி முழுமையாக அவன் ஒற்றை மார்பை வாயால் சப்பி உறிஞ்சத் தொடங்கினான். அவன் மண்டைக்குள் ஆயிரம் குட்டிப்பாம்புகள் நெளிந்து நெளிந்து நழுவின. இது புதிதில்லை என்றாலும் ஒவ்வொரு முறையும் அவனுக்குள் இப்படித்தான் நிகழ்கிறது. அவனின் மார்புக் காம்பினை மெல்லக் கடித்து இழுத்த இவன் நிமிர்ந்து இரு கைகளையும் இரு புறமும் ஊன்றியபடி அவன் மூக்கின் மீது தன் மூக்கை வைத்தபடி ‘‘ புரியுதா...எதுக்குன்னு?’’ என்றான்.
 
‘‘ என்ன இது... நீயும் தினமும் இதேபோல்தான் செய்கிறாய். இப்படிச் செய்து செய்து என் மார்பே தளர்ந்து போய்விட்டன. எனக்கொன்றும் பெரிதாய் இதில் ஏதும் தெரியவில்லை. நீ காம்பினைச் சப்பும் நேரம் என்னால் தாங்க முடியாத சந்தோசம் உண்டாகிறது. அவ்வளவுதான்.’’

‘‘ அவ்வளவுதான் என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டாய். உன் மார்புக் காம்பிலிருந்து நான் பால் உறிஞ்சுகிறேன். குடிக்கிறேன். அவ்வளவு சந்தோசம் எனக்கு. பால் குடித்த மயக்கத்தில் சிறு ஏப்பம் விட்டுத் தூங்கி விடுகிறேன். நீயோ இதைத் தாங்க முடியாமல் துடிக்கிறாய். நெளிகிறாய். என் முதுகைக் கீறுகிறாய். இறுதியாய் உறிஞ்சி முடித்து உன் மார்புக் காம்பைக் கடிக்கும்போது ஒரு எம்பு எம்பி என்னைக் கடிக்கிறாய். பின்பு நீயும் களைப்பில் தூங்கிவிடுகிறாய். இவ்வளவு சந்தோசம் கிடைக்கிறதே... போதாதா...சரி. நீ கேட்ட கேள்விக்கு பதில் இதுதான். எவ்விதத்திலும் உபயோகமற்ற மார்புகளை ஆணுக்குக் கொடுத்ததே இன்னொரு ஆண் அவன் மார்புகளில் உதடுகளால் விளையாடத்தான். பால் ஊறுவதையும் குடிப்பதையும் நான் உணர்கிறேன். உன்னால் உணர முடியவில்லையென்றால் காலப்போக்கில் நீயும் உணர்வாய்’’ அவன் வாயிலிருந்து இவன் வாயை எடுத்துவிட்டு மல்லாந்தான்.

‘‘ஆரம்பித்த இடத்திலேயே வந்து நின்றுவிட்டாய்.’’

‘‘ என்னது?’’

‘‘ பெண் ஆணாய் உணர்வதும் ஆண் பெண்ணாய் உணர்வதும்... அதுதானே இங்கே நடக்கிறது.’’

‘‘ புலம்பாதே. நான் என்னைப்போலவே வாயும் மூக்கும் மார்பும் புட்டமும் குறியும் உள்ள இன்னொருவனுடன்தான் உறவு கொள்கிறேன். இதுபோல் இல்லாத பெண்ணுடன் அல்ல. உணவின் ருசி கனவில் தெரியாது என்பதுபோல்தான் இது. இது வேறு உலகம். வேறு காற்று. வேறு இருள். நீயும் நானும் வாழும் வாழ்க்கை அவ்வளவு எளிதில் எவரும் வாழ முடியாத ஒன்று.’’

‘‘ ஓஹோ... அது எளிதான வாழ்வு இல்லைதான். இங்கே ஆண்பால் உண்டு பெண்பால் உண்டு. இரண்டும் அல்லாத மூன்றாம் பால் உண்டு. நமக்கென்ன பெயர்?’’

‘’ தன்பால் புணர்வாளர்கள்.’’

‘‘ அப்படியென்றால் நீ உன்னையும் நான் என்னையுமா புணர்கிறோம்?’’

‘‘ இல்லையே...’’

‘‘ அப்புறம் எதற்கு அந்தப்பெயர்? தன்னைப்போலவே இருக்கும் இன்னொரு உடலுடன் என்றால் உலகில் நடமாடும் அத்தனை உடல்களுடனா உச்சம் எய்கிறோம். உனக்கு நானும் எனக்கு நீ மட்டுமே வாழும் இவ்வாழ்க்கைக்கு இன்னும் சரியான பெயர் சூட்டப்படவில்லை. இப்படிப் பல ஆண்டுகாலமாக பெயரே இல்லாத ஒன்றுக்காகத்தான் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். நாம் இதை வெளிச் சொல்வதற்குள் எவ்வளவு ரத்தம் சிந்த வேண்டியிருக்கிறது...எத்தனை பெரிய உயர் அந்தஸ்தை அடைய வேண்டியிருக்கிறது...’’

‘‘ புரியவில்லை.’’

‘‘ இப்போது உன்னால் வீதியின் நடுவில் நின்று என் உடம்புடனான தேடல் இவனுடன்தான் என்று உரக்கச் சொல்ல முடியும். ஏனென்றால் நீ அடைந்திருக்கும் உயரம், பெயர், பதவி, பணத்தின் வெளிச்சம் என்பதன் அர்த்தம் வேறு. வெளித்தெரியாத பல கிராமங்களில் பண வசதி இல்லாத சாதாரண கூலி வேலை செய்யும் ஒருவனுக்கு இந்த இச்சை இருக்காதா என்ன...அவன் இன்னொரு ஆணுடன் முத்தம் பகிர மாட்டானா, அவனுக்குத் தன்னைப் போலவே இருக்கும் இன்னொரு ஆணின் புட்டத்தின் சதையாட்டம் மோகம் தூண்டாதா... எங்காவது கேள்விப்பட்டிருக்கிறாயா? ஒரு கிராமத்திலிருந்து மூன்றாம் பாலினத்தவரோ தன்பால் ஈர்ப்பு கொண்டவரோ வெளிவந்து தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார்களா? அப்படி வெளிப்பட்டாக வேண்டுமென்றால் அவர்கள் முதலில் அந்தக் கிராமத்தை விட்டு வெளிவர வேண்டியிருக்கிறது. சிறு வயதில் நான் கிராமத்தில்தான் வளர்ந்தேன். இப்போது போனாலும் அந்தக் கிராமம் சூரியன் மறைந்த பிறகு காட்டும் நிறம் எனக்கு சற்றே பயம் கூட்டக் கூடியதாய்தான் இருக்கும். என்னவென்றே தெரியாமல் வலிக்க வலிக்க என் பின்புறத்துளையில் இறுகிய ஆண் ஒருவன் தன் வலிமையைச் செலுத்தியது கிராமத்தின் பால்யத்தில். கால மாற்றத்தில் என்ன நடந்தது. இப்போது பார்... உனக்காக நான் ஷேவ் செய்து சுத்தமாக வைத்திருக்கிறேன் ரகசியங்கள் கசியும் ஒரு துளையை. எத்தனை முறை என்றாலும் உனக்காக இறுக்கமாகும் ஒரு சொர்க்கத் துளையை.’’

‘‘ இப்படித்தான் ரசிக்க ஆரம்பித்துவிட்டால் படிப்படியாக உனக்கு உள்ளுக்குள் ஊற ஆரம்பித்துவிடும். எனக்கு புட்டத்துளையில் புணர்வது குறித்து பெரிதாய் ஆச்சர்யம் எதுவுமில்லை. வேறு வழியில்லாத வழியில் கண்டடையும் வழிதானே அது. ஆனால், குழந்தையாய் இருக்கும்போது அம்மாவும் அப்பாவும் தொட்டுக் கழுவிய அருவருப்பான இடமமில்லையா அது. ஒரு காலகட்டத்துக்குப் பின் அவரவராலே சரியாய் காண முடியாத மறைந்திருக்கும் ரகசியம் அது. அங்குதான் எவ்வித அருவருப்பும் இல்லாமல் உன் மூச்சு படுகிறது. உன் நாவின் நுனியால் அத்துளைக்குள் எதையோ தேடுகிறாய். வெளிச்சம், இருள், ஏன் இந்த உலகம் அறுந்துபோய் பல் கடித்துக் கிடக்கிறேன். உன் பிசுபிசுப்பான எச்சில் ஈரம் துளை சுற்றிலும் படிந்து வழியும்போது எழும் வாசனை என் நாசியையே எட்டி உலுக்குகிறது. அங்கே கண் விழித்துக் கிடக்கும் உன் நாக்கு இரண்டாய் பிளவுற்று என்னை ரெண்டாய் கிழிக்கிறது. நமக்குள் எந்த அருவருப்பும் இல்லாமல் போனதே நம் காதலை அதிகப்படுத்துகிறது. புனிதப்படுத்துகிறது. ஆனால் இச்சமூகம் இது எதையுமே புரிந்துகொள்ளாமல் நம் உடல் கண்டு முகம் சுளிக்கிறது.’’

அவன் சிரித்தான். ‘‘ ஏன் சிரிக்கிறாய்?’’

‘‘ நான் சிரிக்கிறதுக்கு ஒரு காரணம் உண்டு. நாம் யார் என்று தெரிந்தபின்புதான் நம்மை இவ்வுலகம் அருவருப்பாய் பார்க்கிறது. தெரியாதவரை நம் அருகில் அமர்ந்து பயணிக்கிறது. தியேட்டரில் பக்கத்து சீட்டில் அமர்ந்து சினிமா பார்க்கிறது. கடவுளுக்கான பிரார்த்தனையில் வரிசையில் நிற்கிறது. இந்த ஜனத்திரளில் நாமும் ஒன்றுதான்...எல்லாம் தெரியும்வரை. தெரிந்தாலும் ஒன்றும் நிகழப்போவதில்லை. சட்டம் சரியென்று சொல்லப்பட்ட எத்தனையோவற்றை இந்த உலகம் விலக்கி வைக்கவில்லையா... அதுபோல்தான். முன்பு ஒருமுறை கேட்டாய் அல்லவா...பாம்பு என்பது பாம்பாய்தான் பார்க்கப்படுமே தவிர ஆண் பெண் வித்தியாசம் கிடையாது. அதுபோல்தான். மனிதர்களில் ஆண் பெண் வித்தியாசம் இருந்தாலும் எல்லோருமே பாம்புதான். நிறைய விஷமுள்ள இரட்டை நாவுள்ள பாம்புகள். சிலருக்கு விஷத்தின் நிறமும் மணமும் சுவையும் மிகப் பிடித்திருக்கிறது. இதைப்போல்.’’

தளும்பி நின்று வழிந்த சுக்கிலத்தை நாவினால் நக்கி சுவைத்து உள்ளிழுத்துக்கொண்டவன் அவனின் விறைப்பை முழுவதுமாய் உள் வாங்கினான். சூடாய் பொங்கி வழிந்த உயிர்ப்பிசுபிசுப்பை உறிஞ்சி விழுங்கினான். இவன் ‘‘ போதும் போதும்’’ என்று முனகிய பின்பும் விடாது உறிஞ்சி விழுங்கியவன் ‘‘ உன் மார்பிலிருந்து வரும் பாலுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது’’ என்றான்.

‘‘ கடைசி வரைக்கும் ஒத்துக்கொள்ள மாட்டாய்’’ என்றான் சின்னச் சிரிப்புடன் இவன்.

‘‘ என்னவென்று?’’ என்றபடி தொடை இடுக்கிலிருந்து நிமிர்ந்தான் அச்சதையினை மென்மையாய் கடித்தபடி அவன்.

‘‘ என் மார்பில் பால் என்று ஏதுமில்லையென்று.’’

இவனின் கையை எடுத்து தன் மார்பின் மீது வைத்து அழுத்தியவாறு ‘‘ புரியும். உனக்கும் உன் உலகத்துக்கும் ஒருநாள்’’ என்றான் அவன்.

‘‘ எப்போது?’’

‘‘ நீயோ நானோ அல்லது எதுவுமே இல்லாமல் போகும்போது.’’

அவன் இறந்து பல வருடங்களுக்குப் பிறகான ஒருநாள் நிசியில் தன் மார்பிலிருந்து பெருகி வழிந்து வீதியெங்கும் பெருக்கெடுத்தோடிய பாலின் பிசுபிசுப்பைப் பார்த்தவாறு தன் இரண்டு கைகளாலும் மார்பினை அழுந்தப் பிடித்தபடி அழுதுகொண்டிருந்தவனின் நிர்வாண அழுக்கின் மீது சோடியம் வேபரின் மஞ்சள் தன் நிறத்தை மாற்ற முடியாமல் தவித்தபடி கிடந்தது.




தூக்கம்

கதை







இரவு 10 மணிக்கு மேல் அவனுக்கு அந்த எண்ணம் தோன்றியது. 9 மணிக்கு செட்டிநாடு ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்டான். அப்போது கவனமெல்லாம் பரோட்டாவின் மேல் ஊற்றப்பட்ட சால்னாவில் லேசாய் தென்பட்டுக்கொண்டிருந்த கறி வாசனையில் இருந்தது. அதைத் தவிர்த்து பரோட்டா சாப்பிடக் காரணமாயிருந்த ஊருக்குச் சென்றுவிட்ட மனைவி மகன் மீதிருந்தது. இருவரும் இருந்திருந்தால் இந்த பரோட்டா டின்னர் நிகழ்ந்திருக்காது. இவ்வளவுக்கும் இவன்தான் அறிவுரை கூறுவான், பரோட்டா சாப்பிடுவது எத்தனை கெடுதலென்று. ஒரே ஒருநாள் மட்டும் என்று மனைவியும் மகனும் கெஞ்சினாலும் பிடிவாதமாய் மறுத்துவிடுவான். அவர்கள் கண்ணுக்கு அப்போது அவன் எப்படித் தெரிவானென்று நினைத்து சிரித்துக்கொள்வான். அவன் ஏன் சிரிக்கிறான் என்று அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் ஒரு ரகசிய ஆசையாய் கல்லில் கிடந்து வெந்துகொண்டிருக்கும் அவனுக்கான பரோட்டா. மனைவியும் மகனும் ஊருக்குச் செல்லும்போது மட்டுமே அந்த பரோட்டா புரட்டிப்போடப்படும். அது ஒரு அபூர்வ நிகழ்வு. அந்த அபூர்வமென்பது இவனுக்கான பரோட்டா தட்டில் வைப்பதை விட அரிதாய் நிகழும் ஒன்று.
நான்கு பரோட்டாக்களை சால்னாவில் முக்கியடித்து உபரியாய் ஒரு ஆஃப் பாயிலுடன் இரவுணவை முடித்தபோதுகூட அவனுக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை. கதவைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்து சோபாவில் அமர்ந்து டிவியை ஆன் செய்தான். கையில் இருந்த ரிமோட் கூட ஓர் அபூர்வ நிகழ்வுதான். மனைவிக்கு சீரியல், மகனுக்கு ஏதோ ஒரு கார்ட்டூன் சேனல் என்று ஒதுக்கப்பட்டுவிட்டதால் இவன் அதிகம் டிவியைத் தேடுவதில்லை. அதுவுமில்லாமல் ஆபீஸ் முடிந்து இந்நகரத்தின் போக்குவரத்து சிவப்பையும் பச்சையையும் அணைத்து முடித்து வீட்டுக்கு வந்தால் போதும் என்று அலுத்து வருபவனுக்கு இந்தத் தொலைக்காட்சி விருப்பமற்ற ஒன்று. தொலைக்காட்சியில் ஏதோ பழைய படம் ஓடிக்கொண்டிருந்தது. கறுப்பு வெள்ளை காட்சிகளை வைத்துதான் பழைய படமென்று தீர்மானித்திருந்தான். அப்போதுதான் ஒரு காட்சியாகவோ எழுத்துருவாகவோ அவன் மூளைக்குள் சில நொடிகள் தோன்றி மறைந்தது ஒரு பிம்பம் அல்லது எண்ணம். ’விடியறதுக்குள்ள நாம செத்துடுவோமோ...’ 

ஒரு ஃபிளாஷ் வெளிச்சம் போல் இப்படி ஒன்று அவனுக்குள் தோன்றிய அடுத்த நொடி அவனுக்கு வயிறு வலித்தது. மலம் கழிக்க வேண்டுமெனத் தோன்றியது. மனைவி மகனுக்குத் தெரியாமல் சாப்பிட்ட பரோட்டா மீது பழியைப் போடாமல் வெஸ்டர்ன் டாய்லெட் சென்று அமர்ந்தான். அந்தக் குழப்பமான எண்ணம் அதிகமானது. எதற்கு இப்படித் தோன்றுகிறது என்ற பதற்றத்திலே அவசர அவசரமாய் வெளியே வந்தான். டிவியை அணைத்தான்.  அவனுக்குள் அந்த எண்ணமே மீண்டும் மீண்டும் சுற்றியடித்தது. இப்படி தான் மட்டும் தனியாய் இருக்கும்போது தோன்றிய எண்ணம் எதன் பொருட்டு என்று திரும்பத் திரும்ப நினைத்தான். எதுவும் புரியாமல் தலையை அழுந்தப் பிடித்துக்கொண்டான். படுக்கையில் வந்து படுத்தான். லேசாக மூச்சுத் திணறுவதுபோல் இருந்தது. எழுந்து வந்து மீண்டும் சோபாவில் அமர்ந்தான். அறை லைட் எரிந்துகொண்டிருந்தது. ஹாலிலும் அப்படியே. பாத்ரூம் லைட் ஏற்கெனவே எரிந்துகொண்டுதான் இருந்தது. பாத்ரூம் கதவு மூடியிருந்தது. வீடு முழுவதும் வெளிச்சத்தில் இருக்க அவன் விடிவதற்குள் மரணித்துவிட மாட்டோம் என்று முழுமையாய் நம்பினான். பெயின்ட் தயார் செய்யும் கம்பெனியில் உயர் பதவி. நேரிடையாக பெயின்ட்டுக்கும் அவனுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லையென்றாலும்  பிரமாண்டமான கட்டடத்தையோ மிகப்பெரிய வண்ணமயமான வீட்டையோ கடக்கும்போது இவனுக்குள் புதிதாய் ஒரு வண்ணம் லேசாய் ஒரு தீற்று தீற்றிவிட்டுச் செல்லும்.  புன்னகைத்துக்கொள்வான். மனைவி என்பதற்கு இவனுக்கு சரியான அர்த்தம் தெரியாது. ஆனால் அழகான மனைவியின் கம்பீரம் என்றால் அது  அவன் மனைவிதானென்று உறுதியாய் நம்பினான்.  அவனின் பால்ய நாட்களையெல்லாம் ஞாபகப்படுத்தியபடி வளரும் அவன் மகனின் சிரிப்பு நினைவுக்கு வந்தது. இவர்களையெல்லான் விட்டுவிட்டு அவன் மட்டும் இறந்துபோகிறதுபோல் அத்தனை பலமாய் ஒரு வரி மனதில் உதிர்ந்ததும் தலையை வேகமாய் ஆட்டி அவ்வெண்ணத்தைக் கலைத்தான். இதற்கு மேல் வேகமாய் சுற்றமுடியாது என்றபடி சுற்றிக்கொண்டிருந்த ஃபேனையே கவனித்தவன் அவனது நெற்றி, முகம் எங்கும் படிந்திருந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டபடி எழுந்தான். இன்னொரு ஃபேனின் சுவிட்சினைப் போட்டான். 

நிறைந்த சம்பளத்தில் உயர் பதவி, எவ்விதப் பிரச்சினையுமில்லாத குடும்ப வாழ்வு இவற்றையெல்லாம் விட்டுவிட்டு அவன் மட்டும் இவ்வளவு சீக்கிரம் இறந்துபோவதை நினைத்து முதலில் பயமாகவும் பிறகு வெறுப்பாகவும் பின் வருத்தமாகவும் இருந்தது. மனவிக்கு போன் செய்து சொன்னால் மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாயிருக்குமென்று நம்பினான். ஊருக்குச் சென்றிருப்பவர்களை ஏன் பயமுறுத்த வேண்டும் என்று உடனே அந்த எண்ணத்தை அழித்தான். தான் அவவளவு சீக்கிரம் இறந்துவிட மாட்டோம்...இது ஏதோ ஒருவித பிரச்னை, தற்காலிக பயம் சிறிது நேரத்தில் உடலும் மனதும் இயல்பாகிவிடும் என்று நம்பும்போதே வேறு ஏதோ ஒன்று அவ நம்பிக்கையாய் உள் எழுவதைக் கவனித்தவன் இரண்டு ஃபேன் சுற்றியும் ஏன் இப்படி வியர்க்கிறது என்று குழம்பினான். ஜன்னலைத் திறந்துவைத்தால் கொசு வந்துவிடும் பயமும் இருந்தது அவனுக்கு. கொசு வந்து அவனைத் தூங்கவைக்கப் போவதில்லை, அவனது மரணத்திலிருந்து அவனைக் காப்பாற்றப் போவதுமில்லையென்று அழுத்தமாக ஓர் எண்ணம் வந்தது. அதே நேரம் அபத்தமாகவும் பட்டது அவனுக்கு. நகரத்தில் ஏழை, பணக்காரன், குடிசை, அபார்ட்மென்ட் வித்தியாசமில்லாமல் வாழும் ஒரே உயிரினம் கொசு மட்டும்தானே என்று சம்பந்தமில்லாமல்  அவன் ஞாபகத்தில் வந்துபோனது. நான்கு சுவர்களுக்குள் அடைபட்ட உணர்வு  பயமுறுத்தியது. பெட்ரூமில் ஏசி இருக்கிறது. உள்ளே செல்ல சின்னதாய் ஒரு பயம் இருந்தது. இந்த வயதிலேயே இப்படி ஒரு வாழ்க்கை கிடைத்த தனக்கு ஏன் இவ்வளவு சீக்கிரம் இப்படி ஒரு மரணம் நிகழ வேண்டும் என்ற கேள்வி மட்டும் மீண்டும் மீண்டும் அவனுக்குள் தன்னை எழுதிக்கொண்டே இருந்தது. எங்கேயோ படித்ததோ யாரோ சொன்னதோ அவனுக்குள் தோன்றி புதிதாய் ஒரு பூட்டு திறக்கும் செயலை நிகழ்த்திக்கொண்டிருந்தது. 

நிறை வாழ்வு வாழ்பவர்கள் மனதில் அவ்வப்போது இதுபோன்ற எண்ணம் தோன்றி மறைவது உளவியல் ரீதியாக சாதாரணமான ஒன்றுதானே என்ற குரல் அவன் காதுக்குள் கேட்ட சமயம் யதேச்சையாக பார்வை கடிகாரத்தின் மீது சென்றது. அவன் இதயத்தில் நொடி முள் மிக மெதுவாய் நகர்ந்து நின்றது. 12. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாய் இதைப்பற்றித்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறோமா... ச்சே என்ன இது? தான் இறந்துவிடுவதுபோல் எந்தச் சம்பவமோ பேச்சோ கனவோ முந்தைய நாட்களில் எதுவும் நிகழவில்லையோ என்பது வேறு குழப்பமாய் இருந்தது அவனுக்கு. அவனுக்குத் தெரிந்த கடவுள்களை மனதுக்குள் வழிபடத் துவங்கினான். காலையில் சிடியில் கேட்கும் சுப்ரபாதமோ காயத்ரி மந்திரமோ கணபதி அகவலோ இளையராஜாவின் புத்தம் புது காலையோ வரிசைப்படி ஊர்வலம் போயின. சிறுவயதில் ஊரில் இருக்கும்போது கெட்ட கனவு கண்டு நடு ராத்திரி விழித்து கத்தினால் அவன் அம்மாதான் சாமி ரூமிலிருந்து விபூதி எடுத்துவந்து நெற்றியில் பூசிவிடுவாள். அதுபோல் இப்போது செய்தால் தூக்கம் வருமா? நகரத்துக்கு வந்த பிறகு சாமி ரூம் என்று தனியாய் அமைந்த பிறகு பெரிதாய் சாமியெல்லாம் பற்றி யோசிப்பதில்லை. அது சாமியின் அறையாயிற்று. அவ்வளவுதான். விபூதி பற்றிய யோசனையைக் கைவிட்டான். மற்ற எந்த பிளாட்டிலும் எந்தச் சத்தமும் இல்லாமல் இத்தனை அமைதியாக இருக்குமா இந்த இரவு? ஏன் மற்ற பிளாட்டில் எல்லோரும் தூங்கிவிட்டார்களா? 12 மணிக்குள் இந்த நகரம் இப்படியான மெளனத்துக்குள் தனனைப் புதைத்துக் கொள்ளுமா? கேள்விக்குறியின் அளவு அவனுக்குள் பெரிதாகிக்கொண்டே போனது.  அவனது மரணம் குறித்து ஏதோ செய்தி சொல்வதாய் இருந்தது அவனுக்கு அவ்விரவு. அவனுக்குதான் இந்நகரின் நடுமை என்பது எப்படி இருக்குமென்று தெரியாதே. கதவு திறந்து வெளியே சென்று பார்க்கலாமா...வராந்தாவில் நடந்து சென்று இந்த மூன்றாவது மாடி சிட் அவுட்டின் மேலிருந்து இந்நகரத்தின் இரவை உற்று கவனிக்கலாமா... அவன் தொந்தரவில் விழித்துக்கொள்ளும் இந்த இரவாவது அவன் மரணத்தைத் தள்ளிப்போடாதா... ஏதேனும் ஒரு நாயின் குரைப்புச் சத்தம் அவனது இத்தகைய மனநிலையைக் குலைத்துப் போட்டு விடாதா...தலையில் பட்டென்று அடித்துக்கொண்டான். என்ன யோசித்தாலும் அவனுக்கு மீண்டும் மீண்டும் அவனது மரணம் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது. இப்போது வெளியே சென்று உறங்கிக்கொண்டிருக்கும் மற்றவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டுமா என்ற யோசனையும் அவனுக்குள் ஓடியது. நாளை விடிவதற்குள் அவன் இறந்துவிடுவான் என்று அவர்களிடம் சொன்னால் அவனைப் பைத்தியம் என்று நினைக்க மாட்டார்களா... அது மேலும் அசிங்கமாகிவிடாதா... ஏன் ஒரு சாட்சியை வைத்துக்கொண்டு அவன் இறந்துபோக வேண்டும் என்று சிந்தித்தான். எழுந்தான். 

உறங்காமல் விழித்தபடி இருந்தால் இப்படித்தான் கண்டபடி எண்ணம் ஓடும். படுக்கையறைக்குள் நுழைந்தான். மொபைலை எடுத்து பாடல்கள் இருக்கும் பகுதிக்குச் சென்று ஓப்பன் செய்தான். இளையராஜா பாடல்கள். எத்தனையோ பேருக்கு இரவுத் தாயாய் தாலாட்டி தூங்கவைக்கும் இளையராஜா அவனை உறங்கவைத்து அவன் மரணத்தைத் தள்ளி வைக்க மாட்டாரா... சின்னதாய் புன்னகைத்தான். இப்படியெல்லாம் எப்போதும் தான் இல்லையே என்பதை நினைத்து கவலை கொண்டான். இந்த இளையராஜா பாடல்கள் கூட மற்றவர்கள் சொல்லியதுதான் அவனுக்கு. படுப்பதற்கு முன் பாடல்கள் கேட்டால் தூக்கம் வரும் என்றெல்லாம் அவனுக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும்  தலையாட்டியபடி பாடல்களைத் தேர்வு செய்து மெளனமான நேரம் இளம் மனதில் என்ன பாரம் என்ற பாடலை குறைவான சவுண்டில் வைத்தான் எஸ். ஜானகியின் குரல் அறையின் செயற்கை குளிரை மேலும் குளிராக்கியது. லைட்டை ஆஃப் பண்ணிவிட்டு படுத்தான். கண்ணை மூடினான். கைக்கெட்டும் தூரத்தில் மொபைலை வைத்துக்கொண்டான். தூக்கம் கண்ணைச் செருகும்போது கவனமாய் மொபைலை அணைக்க அதுதான் வசதியாய் இருக்கும். மெளனமான நேரம் முடிந்தது. அடுத்த பாடல் துவங்கியது. புரண்டு படுத்தான். பாடல்கள் வரிசை கட்டி வந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு பாடலும் அப்பாடல் சம்பந்தப்பட்ட ஏதோ ஒன்றை அவன் மூளையில்  பழைய ஞாபகங்களின் சாட்சிகளாய்  ஓடவைத்துக்கொண்டிருந்தன. மல்லாந்து படுத்து மார்பின் மீது இரு கைகளையும் வைத்தபடி நீளப் பெருமூச்சு விட்டவன் வினோதமாய் ஏதோ ஒன்று உறுத்த மொபைலை எடுத்துப் பார்த்தான். மணி 2: 30 என்று காட்டியது. லேசாகக் கை நடுங்கியது. எழுந்து உட்கார்ந்து இரண்டு கைகளாலும் தலையை இறுகப் பிடித்துக்கொண்டான். அப்படியென்றால் இரண்டு மணி நேரம் பாட்டு மட்டுமே கேட்டுக்கொண்டிருந்திருக்கிறோம். தூங்கவில்லை . தூக்கமும் வரவில்லை. ஆழ்ந்த உறக்கம் என்பதே 12 லிருந்து 3 வரக்கும்தானே...அப்படிப்பட்ட உறக்கத்தைக் காணாமலடித்துவிட்டதை உணர்ந்தான். இனிமேல் உறங்கி என்னாகப்போகிறது. கண்கள் எரிச்சலில் மிதப்பதை வெறுத்தான். இதயத்தின் படபடப்பு அவன் உள்ளங்கையில் தெரிந்தது. மொபைல் எடுக்கும்போது கை நடுங்கியதை கவனித்து அதிர்ந்தான் . எதற்கான அறிகுறி இது? மரணத்தை நோக்கிய பயணத்தில் இருக்கிறானோ. அவ்வளவுதானா எல்லாம்... வாழ்ந்தது போதுமா... அழுகை வந்தது அவனுக்கு. பாட்டை நிறுத்திவிட்டு அறையை விட்டு வெளியே வந்தான். 

ஹாலில் லைட் எரிந்துகொண்டிருக்க ஒரு நொடி தயங்கினான். லைட்டையும் ஃபேனையும் அணைக்காமல் சென்றுவிட்டதை அவன் மூளை தாமதமாக உணர்ந்தது. மனம் குழம்பியதுதான் இதற்குக் காரணமா என நினைத்தவன் இல்லை இல்லை இது வேறு விதமானது இப்படி ஒரு ராத்திரி தூங்காவிட்டாலெல்லாம் எவரும் செத்துவிட மாட்டார்கள் என்பதை மனதுக்குள் வலிமையாய் நிறுத்திக்கொள்ள முயன்றான். கூடவே அப்படிச் சாவதில் தான் ஏன் முதல் ஆளாக இருக்கக் கூடாது என்றொரு எண்ணமும் வால் பிடித்தபடி வந்தது. எந்த வியாதியும் இல்லாமல் எத்தனையோ பேர் இறப்பதில்லையா... அதுபோல் இவனும் இறந்துவிடுவானா...அவனுக்குத் தோன்றிய எண்ணம் உண்மைதான். அதுதான் தூக்கம் இல்லாமல் இப்படி வதைக்கிறது. அவன் தன் எண்ணத்தை முழுமையாக நம்பினான். இப்படி நம்பி நம்பித்தான் வாழ்க்கையில் முன்னேறினான். இப்போது சாவிலும்.  இவனது மரணம் என்பது இப்படித் தூங்காமல் விடிய விடிய விழித்திருந்து நடக்கப் போகிறதோ... தனது மரணம் வித்தியாசமான ஒன்றாக இருக்க வேண்டுமென எப்போதோ விரும்பியவன்தான். அது எப்படிப்பட்ட வித்தியாசம் என்பதை இப்போது உணர்ந்தான். ஒருநாள் தூங்காமல் இருந்தால் எதுவும் விபரீதமாய் நடந்துவிடப் போவதில்லை என்று உள் மனம் நம்பியது. அதே ஆழ்மனத்தில் உருவான விடிவதற்குள் தான் செத்துவிடுவோம் என்ற எண்ணம்தான் இப்படிப் பாடாய்படுத்துகிறது என்பதையும் அறிந்தான். இப்படி இருப்பது நோயா, மூளையில் நிகழும் ரசவாதமா என கூகுளில் தேடலாமா என்று யோசித்தான். மூன்று மணிக்கு மேல் எதற்கு தேவையில்லாமல் நெட்டை ஆன் செய்ய வேண்டும் என வேண்டாமென்று தீர்மானித்தான். மணி மூன்றுதானா என்பதை உறுதி செய்துகொள்ள கடிகாரத்தைப் பார்த்தான். 3: 51 என்று நியான் பச்சை ஒளிர்ந்தது. இன்னும் சற்று நேரத்தில் விடிந்துவிடுமோ... வாக்கிங் கிளம்பிப் போகலாமா என்று நினைத்தான். வீட்டுக்குள்ளே இருப்பதனால் இப்படியெல்லாம் மோசமான எண்ணம் வந்து தூங்காமல் படுத்துகிறதோ என்று யோசித்தவன் அப்படியே சோபாவில் சாய்ந்தான். 

தலையை வலிப்பது போல் இருக்க அடிவயிறு கனத்திருந்தது. எரிந்துகொண்டிருந்த லைட்டை அணைத்து விடலாமென எழுந்தவன் டாய்லெட் சென்று சிறுநீர் கழித்து வந்தான். பசித்தது. ஃப்ரிட்ஜைத் திறந்து பார்த்தான். ப்ரெட்டும்  ஜாமும் இருந்தது. எடுத்து ஒரு ப்ளேட்டில் வைத்துக்கொண்டு  டைனிங் டேபிளில் அமர்ந்தான். இப்படி யாராவது விடியவிடிய தூங்காமல் விழித்திருந்து 4 மணிக்கு ப்ரெட் சாப்பிடுவார்களா...ப்ரெட்டை பிட்டு ஜாமில் தோய்த்து வாயில் திணித்தவனின் யோசனை அப்படியே ஒரு நொடி நின்றது. ஒருவேளை திடீரென மரணிப்பவர்களுக்கு இப்படித்தான் சம்பந்தமில்லாமல் பசிக்குமா? மூளையைப் பிறாண்டிய கேள்விகளுடன் சாப்பிட்டு முடித்தான். உடலில் புத்துணர்ச்சி கூடியது போல் இருந்தது. வாஷ் பேசின் சென்று கை கழுவியவன் டவலில் கை துடைத்தபடி ஜன்னல் கண்ணாடி பார்த்து புருவங்கள் சுருக்கினான். சாம்பல் நிறத்தில் இருந்தது ஜன்னல். லேசாக நீர் படிந்திருந்தது. ஒரு நீரின் ஆரம்பம் கண்ணாடி மேலிருந்து வழிந்ததைக் கவனித்தான். விடிந்தே விட்டதா... வாக்கிங் போகலாம் என ஆவல் எழுந்ததை ஆச்சர்யமாய் கவனித்தவன் தூங்காமல் வாக்கிங் போனால் எதுவும் ஆகிவிடாதாவென கேள்வி தொக்கி நிற்க வேண்டாமெனத் தீர்மானித்தான். போகிற உயிர் இந்த வீட்டிலேயே போகட்டும். ஆமாம் அப்படியே இப்போது இறந்துவிட்டாலும் மற்றவர்களுக்கு எப்படி தெரியப்படுத்துவது? இதென்ன மடத்தனமான யோசனையாய் உள்ளது. தலையின் பின்புறம் தட்டிக்கொண்டான். எல்லோரும் தாங்கள் இறந்ததைத் தாங்களேவா தெரியப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். பெரும் குழப்பமாய் இருந்தது அவனுக்கு. ஒன்று மட்டும் முடிவெடுத்தான். கதவைத் திறந்துவைத்துவிட்டு இறந்துபோய் விடலாம். அனாவசியமாய் ஏன் கதவை உடைத்துக்கொண்டு மற்றவர்கள் உள்ளே வர வேண்டும். பிணவாடை வெளியே தெரிந்து யாராவது வந்து கதவை உடைக்க வேண்டியதில்லை. அந்தச் சிரமத்தை ஏன் அவர்களுக்குத் தர வேண்டும் என்று வாய்விட்டு மெதுவாய் முனகினான். உடல், மன அளவில் மிகத் தளர்ந்திருந்தான். சிறிது நேரத்துக்கு முன்பிருந்த உற்சாகம் எங்கே என ஆச்சர்யப்பட்டான். எழுந்தான். லேசாகத் தள்ளாடியவன் கதவைத் திறப்பதற்காக அதன் உட்புற லாக்கில் கை வைத்தான். கதவு திறந்தே இருந்தது.